12. மனிதர்களில் மட்டுமல்ல விலங்குகளுக்கும் தடுப்பூசி மரணம் பற்றிய சிறிய குறிப்பு. - Dr. G. Prema BHMS

தடுப்பூசி மரணம் #12
Vaccine death #12
மரு. கோ. பிரேமா BHMS,
மனிதரில் ஏற்படும் தடுப்பூசி மரணங்கள் பற்றி இதுவரை பார்த்தோம்.
கணக்கிலடங்கா தடுப்பூசி மரணங்கள் கேட்பாரற்று மறக்கப்படுகிறது.
இவ்வேளையில் இந்த பதிவுகள் ஓர் விழிப்புணர்வு தொடர் மட்டுமே. அனைத்து நாடுகளிலும் நடக்கும் தடுப்பூசி மரணங்களையும் மற்றும் பாதகங்களையும் ஆதாரத்துடன் கூட பேசுவதும் மலைப்பானது.
இந்த தடுப்பூசி அரசியலில் முக்கியமாக இந்தியாவில் சமீபத்தில் மட்டும் நடந்த மரணங்களை ஒரு சிறு பகுதியை மட்டுமே இதுவரை பார்த்தோம்.
இந்த தொடரின் நிறைவு பகுதியாக கால்நடைகள் ,வளர்ப்பு பிராணிகள், மற்றும் மனிதனின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு நடக்கும் தடுப்பூசி அரசியல் பற்றி பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
மனிதரில் நடக்கும் தடுப்பூசி மரணங்களுக்கே இங்கே கேள்வி எழுப்பபடுவதில்லை, இதில் மிருகங்களா என கேட்கிறீர்களா? உண்மை தான். பேச முடியாத குழந்தைகளைப்போலவே இந்த விலங்குகளும் தடுப்பூசி அரசியலுக்கு இரையாகி வருகிறது.
1. மிருகங்களிலும் பல தடுப்பூசி மரணங்கள் anyphylaxis அனைபைலாக்ஸிஸ் எனும் உடல் ஒவ்வாமை இயக்கத்தினால் ஏற்படும்.
2. மனிதரில் போல மிருகங்களிலும் shedding from live vaccines அதாவது நேரடி தடுப்பூசிகளின் மூலம் தடுப்பூசி போட்ட மிருகங்கள் அந்த கிருமிகளை சில காலம் வரை வெளியேற்றிக்கொண்டே இருக்கும்.
3. இதனால் வளர்ப்பு பிராணிகளில் இருந்து சுதந்திரமாக வளரும் பிராணிகளுக்கு இந்நோய் கிருமிகள் பரவும்.
வனவிலங்குகளுக்கும் பரவும்.
4. எனில் வளர்ப்பு மிருகங்களிலிருந்து மனிதருக்கும் இக்கிருமிகள் பரவும்.
புதிய நோய்கள் மனிதரில் பெருகும். வளர்ப்பு பன்றியிலிருந்து நிபா மனிதருக்கு வந்தது போல.
5. மனிதரில் போலவே மிருகங்களுக்கான தடுப்பூசி தயாரிப்பிலும் செய்யப்படும் கிருமி உருமாற்றலினால் கிருமிகள் புதிய வடிவம் குணம் பெற்று புதிய கிருமிகள் பரிணாம மாற்றம் போல வேகமாக பெருகிக்கொண்டே இருக்கும்.
6. மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாமிசம் உண்பவருக்கும் கேடுகளை ஏற்படுத்தும்.
ஆன்டிபயாடிக் அதிகம் செலுத்தப்பட்ட மாமிசம் மூலம் அதை அதிகமாக உண்ணும் மனிதரில் ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டென்ஸ் எனும் எதிர்ப்பாற்றல் வளர்ந்து பல நேரம் அவசர சிகிச்சையில் சிக்கல்கள் ஏற்படுகிறது.
மாமிச உணவு அரசியலில் இவ்விரண்டும் நடப்பது போலவே தடுப்பூசி போடப்பட்ட மாமிச உணவினாலும் கேடு வரும்.
இது கேட்பாரற்று போவது தடுப்பூசி அரசியலின் சாதுர்யம் தான்.
இன்னமும் பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம்.
பதில்கள் இன்றி.



 

0 comments:

Post a Comment