மதுரை, 09.07.18:
மதுரையில் ரத்த தானம் என்ற பெயரில் அழைத்துச் சென்று இளைஞரிடம் கிட்னியை நூதான முறையில் திருடிய கும்பல் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை சுதந்திரநகர் பகுதியைச் சேர்ந்த ஷகிலா மகன் முகம்மது பக்ருதீன் (19) என்பவர் ஸ்டுடியோவில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை மேலூர் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த உறவினர் ராஜாமுஹம்மது, பஷீர் அஹமது ஆகியோர் ராஜா முஹம்மது மகன் அசாருதீன் என்பவருக்கு ரத்தம் தேவைப்படுவதாகக் கூற, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை வளர்நகர் பகுதியில் உள்ள சாஸ்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது பக்ருதீன் ரத்தத்தில் கிருமி இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி
அவர் தாயாரிடமும் கையெழுத்து பெற்றுக்கொண்டு ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்க வைத்து இடதுபுறம் உள்ள கிட்னியை எடுத்து ராஜாமுஹம்மது மகன் அசாருதீனுக்கு பொருத்தியுள்ளனர்.
ஒரு மாதத்துக்கு பின்னர் வீடு திரும்பிய பக்ருதீன், நடக்க முடியாமல், உடல் சோர்வான நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சோதித்த போது பக்ரூதின் கிட்னி எடுக்கப்பட்டதாக கூறியதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தாயார் ஷகிிலா, ராஜா முஹம்மது மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல ராஜாமுஹம்மது தரப்பினர் தடுத்துள்ளனர்.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டதும், உடனடி நடவடிக்கை எடுக்க மேலூர் டிஎஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment