தன்னுடைய முதல் குழ்ந்தை சுகபிரசவம் ஆகும் என்ற நம்பிக்கையில் பத்து மாதமும் தவறாமல் மருத்துவர் கூறும் அனைத்து பரிசோதனைகளும் செய்து அனைத்து மருந்துகளும் உட்கொண்டு மேலும் குழந்தையை நாங்கள் கொழுகொழுவென்று மாற்றிவிடுவோம் என கூறி அந்த கருவிற்கு வைட்டமின் மாத்திரைகள் தந்து ஒன்பது மாதம் வரை சுகபிரசவம் என்று கூறி கொண்டே வந்தவர்கள் திடிரென லேசான வலிக்கு மருத்துவமனை சென்றவரை உடனே உனக்கு வயிற்றில் தண்ணிர் இல்லை இப்படியே விட்டால் குழந்தை மூச்சி திணறி இறந்துவிடும் என கூறி குள்கோஸ் ஏற்றி வீட்டிற்கு கூட அனுப்பாமல் அட்மிட் செய்து 10 நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து விட வேண்டும் இல்லை என்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று அச்சமூட்டி குழப்பி உடனடியாக அவரது கணவரை வரவைத்து கையொப்பம் பெற்று சிசேரியன் செய்துவிட்டார்கள்.
அப்போது முதுகில் போட்ட ஊசி மற்றும் அறுவைசிகிச்சையின் காரணமாக 3 ஆண்டுகளாக இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிபட்டுள்ளார். அந்த வலியை வாயால் விவரிக்க முடியாதாம் அவ்வளவு வலி.
எனது மெய்நலம் தொடுசிகிச்சை மையத்திற்கு இந்த வலிக்காகவே மதன் மஞ்சு என்ற தம்பதியினர் சிகிச்சைக்கு வந்தார்கள்.நாம் சிகிச்சை அளித்து அவர்களை உடலின் இயற்கை விதிகளை மதிக்க கற்றுகொடுத்து.உடல் ஒருபொழுதும் தவறு செய்யாது எனும் உண்மையை உணரசெய்தோம்.
பிறகு சில மாதங்களில் வலிகளெல்லாம் மறைந்து மீண்டும் அப்பெண் கருவுற்றாள்.அவர்கள் கருவுற்றதை உறுதி படுத்திக்கொண்டு மீண்டும் கணவன் மனைவி இருவரும் நமது தொடுசிகிச்சைக்கு வந்தார்கள்.
உங்களின் மருந்தில்லா இந்த தொடுசிகிச்சையில் பிரசவத்திற்கு சிகிச்சை உண்டா என கேட்டார்கள் மேலும் தங்களுக்கு முதல் குழந்தை சிசேரியன் செய்துள்ளதால் நாங்கள் மீண்டும் அந்த அறுவை சிகிச்சை எனும் அந்த கொடுமைக்கு போகாமல் இருக்க முடியுமா என கேட்டார்கள்
நான் முதலில் பிரசவம் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு இயற்கையான ஒர் அற்புத நிகழ்வு அது குறித்து அச்சபட ஒன்றும் இல்லை.நீங்கள் உங்கள் உடலில் எவ்விதமான இராசயன மருந்துகள் மற்றும் விட்டமின் மாத்திரைகள் எடுத்துகொள்ளாமல் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு சுகபிரசவம் நிகழும் என்பதை உடல் ஒருபோதும் தவறு செய்யாது எனும் இயற்கை விதியின் அடிப்படையில் கூறினேன்.
அவர்களும் அதை மகிழ்ச்சியாய் கேட்டுக்கொண்டார்கள் அன்று முதல் அவர்கள் எந்த மருத்துவமனை பக்கமும் செல்லவில்லை. குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் எடுத்து கூட அடிக்கடி பார்த்துக்கொள்ளவில்லை.
ஆரம்ப கட்ட்த்தில் வாந்தி மற்றும் சளிக்காக சில வாரங்கள் என்னிடம் தொடுசிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு அவர் பிடித்த உணவுகளை பசித்தால் உண்பது. இரவில் சீக்கிரமாய் உறங்க செல்வது என்பதை தவிர வேறொன்றையும் செய்யவில்லை
கடந்த 16-02-2015 அன்று தனக்கு முதுகு வலிக்கிறது என்று என்னிடம் சிகிச்சை எடுத்து சென்றார்.அன்று இரவு 12 மணிக்கு தொலைபேசியில் அழைத்து முதுகுவலி காலையில் குறைந்து மீண்டும் இப்போது தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்றார் வலியின் காரணமாக பசியும் இல்லாததால் உணவும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை.நான் சற்று பொறுத்துக்கொள்ளுங்கள் உடலிருந்து கழிவுகள் நீங்கும் போது வலி வருவது இயற்கைதான். வலி குறையும் என ஆறுதல் கூறி காலையில் வாருங்கள் என்றேன்.
சரியாக காலை 6 மணிக்கு அவரின் கணவருடன் இருசக்கர வாகனத்தில் 6 கிலோமீட்டர் தூரம் தாண்டி நம் தொடுசிகிச்சை மையம் வந்தார்.வலி தாங்க முடியவில்லை இப்போது வலி வயிற்றைசுற்றியும் உள்ளது என்றார்
நான் அவரிடம் இது எத்தனையாவது மாதம் என்றேன் அவர் 9 ஆம் மாதம் என்றார் அதனால் நான் பிரசவவலி இருக்காது என்று எண்ணி சிகிச்சை அளித்து வீட்டீற்கு அனுப்பினேன். வீட்டிற்கு சென்ற 2 மணி நேரத்தில் அவருடைய கணவர் தொலைபேசியில் அழைத்து அவருக்கு வலியுடன் நீர் வடிவதாக கூறினார் நான் அவர் கூறிய தகவலை வைத்து அக்கு ஹீலர் மெகராஜ் மேகத்திடம் கேட்டபோது அவர் அந்த பெண்ணுடன் தொலைபேசியில் பேசி இது பிரசவ வலி போல் தான் உள்ளது என கூறினார்.
நான் அந்த தம்பதியரிடம் உங்களுக்கு பிரசவ வலிதான் என நாங்கள் நினைக்கிறோம் நீங்கள் விரும்பினால் உங்கள் இல்லத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.என்று கூறினேன் அதற்கு இருவரும் எங்களின் கனவே அதுதான் நாங்கள் அதற்கு தயார் என்றார்கள்.
அதற்குரிய ஆலோசனைகள் தரும் படியும் கேட்டார்கள்.நானும் அவர்கள் முழுசம்பந்த்துடன் கேட்டதால் நான் சில அலோசனைகள் சொல்லி மேலும் அக்கு ஹீலர் மெகராஜ் பேகதிடம் அவர்களின் விருப்பத்தை கூறினேன் அவர்களும் உடனே தானும் உதவி செய்ய வருவதாக கூறி அடுத்த 2 மணி நேரத்தில் அக்கு ஹீலர் தகிரா பானுவுடன் வந்தார்கள்.
நாங்கள் மூவரும் 17-02-2015 அன்று மதியம் 2 மணிக்கு அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பெண்ணுக்கு வலி விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது.வலி அதிகரிக்கவில்லை நேரம் செல்ல செல்ல வலி வருவதும் போவதுமாக இருந்தது.
அப்பகுதி மக்கள் ஒருவர் பின் ஒருவராக அங்கு எதோ ஆச்சரியம் நடப்பது போல் வந்து வந்து பார்த்து சென்றார்கள்.அவர்களின் சில உறவினர்கள் மருத்துவமனை கொண்டு செலவது தான் நல்லது. அது எல்லாம் அந்த காலம் வீட்டில் குழந்தை பிறப்பது சுகபிரசவம் நடப்பது. இப்போது எல்லாம் அது சாத்தியமா என கேட்டுக்கொண்டிருந்தார்.
நான் அந்த காலமானாலும் இந்த காலமானாலும் பெண் பெண்ணாக தானே இருகிறாள் என நினைத்துக்கொண்டேன் இதில் ஆச்சரியம் அந்த பெண்ணின் மாமியார் 6 குழந்தைகளை வீட்டீல் தான் பெற்றுள்ளார்.அவர் இப்போது அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் அனைத்து வேலைகளையும் அவரேதான் செய்கிறார். ஆனால் நவின மருத்துவமனைகளும் மருந்துகளும் பெருக பெருக இப்போது அப்படி ஒரு பெண்னை பார்ப்பத்து அரிதுனும் அரிதாகவே உள்ளது.பரிசோதனை கூடங்களும் மருந்துகளும் நமக்கு பயத்தை தவிர வேறொன்றையும் நமக்கு தந்ததாக தெரியவில்லை.
இப்படி பேசிகொண்டு நேரம் செல்ல செல்ல இரவு 12 மணிக்கு மேல் வலி நின்று விட்ட்து.அப்பெண் சற்று சோர்வாகி சிறிது நேரம் உறங்கி இருக்கிறார்.அவரின் வசதிகேற்ப அவரை படுக்க வைத்தார்கள்
மீண்டும் மிக பெரிய ஆச்சரியம் சரியாக 4 மணிக்கு வலி மிகுதாய் வந்து குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்து ஒரு புறம் தொங்கி கொண்டு இருந்தது பிறகு அரை மணிநேரம் கடந்து இடுப்பு வரை வந்திருந்தது. இதில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் வேறு எங்கள் அனைவரிடமும் இருந்தது. இன்ஞ் இன்ஞ்ஞாக குழந்தை வெளியே வந்து சரியாக காலை 6 மணிக்கு அழகிய ஆண்குழந்தை அப்பெண் பெற்றெடுத்தாள்
இந்த பிரசவத்தை கிட்ட்தட்ட 16 மணி பொறுமையாக காத்திருந்ததற்க்கு இயற்கை தந்த மிக பெரிய வரமாக நாங்கள் பார்த்தோம்.
இன்னும் பெரிய ஆச்சரியம் குழந்தை தொப்புல் கொடி இடுப்பில் சுற்றிக்கொண்டு பிறந்தது.இதை நிச்சயமாக நவின மருத்துவமாக இருந்திருந்தால் இது மிக பெரிய சிக்கல் எனவும் தாய் அல்லது சேய் யாரையாவது ஒருவரை தான் காப்பாற்ற முடியும் எனவும். நாங்கள் எங்களால் முடிந்த வரை போராடிகிறோம் என்றும் எதேனு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்றும் நம்மிடம் கையெழுத்து பெற்றிருப்பார்கள்
ஆனால் இங்கு நாங்கள் எந்த போராட்டமும் செய்யவில்லை மனம் முழுதும் சந்தோசத்துடன் பொறுமையாக காத்திருந்தோம் அவ்வளவுதான்
அது வரை அங்கு இருந்த அனைவர் மனதில் இருந்த கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் அந்த மழலையின் முதல் சத்தம் முற்று புள்ளி வைத்தது.
நவினம் என்ற பெயரிலும் கருவிகளில் பார்த்து தெரிந்துகொள்வதுதான் அறிவியல் என்றும். எது அறிவியல் என்று தெரியாமல் மருத்துவமனை செல்லாதவர்கள் எல்லாம் எதோ அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று கூச்சலிடுபவர்களுக்கு பதிலாக அந்த குழந்தை பிறக்கும் போது வந்த சிறிய சத்தமே ஒன்றே போதும். அதைவிட வேறு ஒன்றும் விளக்க வேண்டி இல்லை என கருதுகிறேன்.
அந்த 16 மணிநேரமும் தனக்கு வலிகிறது என்று அப்பெண் அழுதால் வலி தாங்க முடியவில்லை என்றாள் ஆனால் ஒரு வார்த்தை கூட என்னை மருத்துவமனை அழைத்து செல்லுங்கள் என் கூறவே இல்லை. இது அப்பெண் தனது உடலை பற்றி அத்தனை தெளிவுடன் பொறுமையுடனும் இருந்தார் என்பதற்கு சான்று. அவரின் கணவருக்கும் சில நண்பர்கள் உறவினர்கள் அவருக்கு எதேனும் அசம்பாவிதம் நடக்க போகிறது என அச்சுரித்தினாலும் அவரும் உறுதியுடனும் தெளிவுடனும் இருந்த்தார்
இயற்கை அதற்கும் மேல் என அந்த சுகபிரசவத்தின் மூலம் நமக்கு சொல்லி த்ந்திருக்கிறது.
இப்படி ஒரு குடுப்பத்தில் கணவன் மனைவி மாமியார் மட்டும் ஆதரவு தந்து ம்ற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அழகாய் சுகமாய் பிரசவம் நடந்திருக்கிறது என்றால். கருவுற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் வீட்டில் பிரவிக்க 100% ஆதரவு இருந்தால் எப்படி இருக்கும் நிச்சயம் அப்போது அது சுகபிரசவமாகவும் திருவிழா போல் அல்லவ இருக்கும்.

நம் சமுகத்தி பிரவத்தின் போது மருந்துகளின் வாசம் இல்லாமல் மழலையின் வாசமும் உறவினர்களின் நேசமும் மட்டுமே இருக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு இந்த சுகபிரசவம் ஒர் சான்று.
எனக்கும் தொப்புள் கொடியை உற்று பார்த்ததும் தொட்டு பார்த்தமும் இதுதான் முதல் அனுபவம்.
நன்றி
அக்கு ஹீலர் அருள்ராஜ்.
(மெய்நலம் தொடுசிகிச்சை மையம்)

0 comments:
Post a Comment