ஒரு குட்டி தேவதை இயற்கை முறையில் வீட்டில் சுபஜனனம்.

29.01.2015 அன்று இரவு 7.33 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மேலும் ஒரு குட்டி தேவதை இயற்கை முறையில் வீட்டில் சுபஜனனம்.


கோவையை சேர்ந்த நண்பர்.பாபு மற்றும் அவருடைய மனைவி சகோதரி.காயத்ரி அவர்களுக்கு முதல் குழந்தை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் 4 வருடங்களுக்கு முன் பிறந்தது. இது இரண்டாவது குழந்தை. பேராற்றலின் துணையுடன் வீட்டில் இனிமையான சுகப்பிரசவமாக அமைந்துள்ளது.
நான்கு வருடம் முன்பு முதல் குழந்தை பல சிரமங்களுடன் சிசேரியன் செய்யப்பட்டு பிறந்துள்ளார். பிரசவத்திற்கு பின்பு உடலில் மிகவும் அசதி, வீட்டு வேலைகளை செய்வதில் சிரமம் என்று மூன்று வருடம் சகோதரி.காயத்ரி அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பின்பு இரண்டாவது முறை கருத்தரித்த போது அவர்கள் எடுத்த முதல் முடிவு, நிச்சயம் இயற்கையான முறையில் மட்டுமே சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்பதே. அதன்படி எந்தவித மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன், தடுப்பூசிகள் போன்றவற்றையும் முழுமையாக தவிர்த்துவிட்டார்கள். ஆனால், அவருடைய உடலில் முதல் கர்ப்பகாலத்தில் இருந்த அசதி, சோர்வு, பயம் போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் நல்ல சுறுசுறுப்புடன், மகிழ்ச்சியுடன் அனைத்து வீட்டு வேலைகளையும் அவரே செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய தாயார் வீட்டில் (உடுமலை) 29.01.2015 அன்று (வியாழன்) இரவு 7.33 மணிக்கு இயற்கை முறையில் ஒரு குட்டி தேவதையை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார்.
பிரசவம் ஆகும்போது அருகில் இருந்து உதவிய அன்புக்குரிய சகோதரி.அக்குஹீலர்.மகாலக்ஷ்மி Acu Healer Mahalakshmi அவர்களுக்கு நன்றிகள்.
சகோதரி.அக்குஹீலர்.மகாலக்ஷ்மி அவர்களிடம் பேசியதில் எனக்கு கிடைத்த சில சுவையான அனுபவங்கள்.
புதன் அன்று இரவே பனிக்குடம் உடைந்து விட்டது (ஒரு பெரிய பலூன் உடைந்தால் எவ்வளவு சத்தம் வருமோ அந்தளவு சத்ததுடன் உடைந்துள்ளது) சற்று நேரத்தில் குழந்தையின் தலையும் வெளியில் தெரிய துவங்கிவிட்டது. ஆனால், தலை வெளி வருவதும் பின்பு மீண்டு உள்ளே போவதுமாக இருந்தது. காரணம் குழந்தையின் கழுத்தில் மாலை சுத்தி இருந்தது. இந்நிலை அடுத்தநாள் இரவு வரைக்கும் தொடர்ந்தது. வியாழன் இரவே குழந்தை வெளியில் வரத்துவங்கியது.
நான் இடை மறித்து : குழந்தை வெளியேற நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்..?
அக்குஹீலர்.மகாலக்ஷ்மி : பிரசவம் பார்த்தல் என்பதன் அர்த்தமே பிரசவம் நடப்பதை வேடிக்கை பார்ப்பதே.. குழந்தை வெளியேற விடாமல் கொடி சுத்தி இருந்ததை உடல் குறிப்பிட்ட அவகாசத்தில் தானே சரிசெய்து கொண்டு வெளியேற முயற்சி செய்யும். அதற்கு தான் "தலை வெளியில் தெரிய துவங்கியும், பிரசவம் ஆக முழுதாக ஒரு நாள் ஆனது". இயற்கை எப்போதும் தவறு செய்வதில்லை. நம்முடைய வேலை அந்த செயலை குறுக்கீடு செய்யாமல் இருப்பது மட்டுமே. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் பேராற்றளுக்கு நன்றி. நன்றி. நன்றி.
இந்த தம்பதியர்க்கும், அருகில் இருந்து உதவிய சகோதரி.அக்குஹீலர்.மகாலக்ஷ்மி அவர்களுக்கு நம்முடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழ பேராற்றல் என்றும் துணை நிற்கட்டும். வாழ்க வளமுடன்; வாழ்க வையகம்.
மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன் இல்லாமல் உங்கள் குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறீர்களா..? அப்படி என்றால், “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்” என்ற இந்த புத்தகம், உங்களுக்கு ஒரு பொக்கிஷம். புத்தகத்தின் முடிவில் வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவ அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளது : https://www.facebook.com/notes/rk-acu/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/508150835981987
மேலும், தடுப்பூசிகள் மற்றும் அவற்றால் ஏற்ப்படும் மரணங்கள், பக்கவிளைவுகள் என்னும் பெயரில் ஏற்படுத்தப்படும் புதிய தீராத நோய்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமா..? தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான, கோரங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் இதோ உங்களுக்காக...! :
https://www.facebook.com/notes/rk-acu/தடுப்பூசிகள்-என்னும்-உயிர்க்கொல்லிகள்/561753987288338
நம்முடைய மற்ற விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம் : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/photo.php?fbid=542145719249165&set=a.109234725873602.10012.100003612254243&type=1
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

0 comments:

Post a Comment