அனைவருக்கும்
வணக்கம் என் பெயர் அருண்குமார், கடந்த சில மாதங்களாக நான் மருத்தவம்
சம்பந்தபட்ட கட்டுரைகளை வெளியிட்டு வருவதற்கு பலர் வரவேற்பும், வாழ்த்தும்
தெரிவித்து வருகிறீர்கள், உங்களுடைய அன்பிற்கு நன்றி இந்நிலையில் என்னுடைய
சொந்த மருத்துவ அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவல்.சில மாதங்களுக்கு
முன் எனக்கு எற்பட்ட விபத்தில் இருந்து நான்மீண்டு வந்ததை பகிர்ந்து
கொள்கிறேன்,தொடர்ச்சியாக... ..
ஆக்சிடண்டும் அக்குபங்சரும் என் வாழ்வில்-1
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர் கம்பம் சென்டரில்2013ம் ஆண்டு மாணவனாக, அக்குபங்ச்சர் எனும் தொடுசிகிச்சை அறிவியல் படித்து கொண்டிருந்தேன், அப்பொழுது வானகம் கருப்பசாமி மற்றும் தாய் வழி இயற்கை உணவகம் மாறன்ஜி ஒருங்கிணைப்பில் சிவகாசியில் 3 நாட்கள் நடைபெற்ற மரபுவழி மருத்துவ முகாமில் கலந்துகொண்டுவிட்டு ஆங்கில மருத்துவம் மனித குலத்திற்கு எவ்வளவு கேடானது என்ற சிந்தனையுடன் 29-12-2013 அன்று மாலை சிவகாசியிலிருந்து ஆண்டிபட்டிக்கு என்னுடைய டூவிலரில் வந்து கொண்டு இருக்கும்போது சுமார் 8.30 மணியளவில் உசிலம்பட்டி அருகில் பூச்சிபட்டி என்னும் ஊருக்கருகில் வந்ததுவரை என் நினைவில் உள்ளது.

என் நினைவு மறக்கடிக்கப்பட்ட நொடியில் நான் ஒரு பெருவிபத்தை சந்தித்திருக்கின்றேன்.ஆம் சாலையின் அருகில் பள்ளி இருப்பதால் சாலையின் குறுக்கே போலீசாரால் வைக்கபட்டிருக்கும் பேரி கார்டர்(இரும்பு தடுப்பு),எதிர்புறம் வந்த வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தால் தெரியாததனால் நான் வந்த 50-60கீ.மீ வேகத்தில் அந்த பேரி கார்டரில் என் பைக்கின் முன் சக்கரம் மோதி,எனது முகம் இரும்பு கம்பியில் அடிபட்டு மூக்கிலும்,காதிலும் ரத்தம் வெளியேறியது.தலைகவசம்(ஹல்மெ ட்) அணிந்திருந்தும் மூக்கிலும்,அதை ஒட்டி இருபுறமும் உள்ள மேல்தாடை எலும்புகளில் மட்டும் பலத்த அடி.முகத்திலும்,மண்டையிலும ் சின்ன சிராய்புகள்.
பொதுமக்கள் வழக்கம்போல் 108க்கும்,என் வீட்டிற்கும் போன் செய்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் என்னை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.1மணி நேரம் கழித்து வந்த என் வீட்டார்களிடம் இவருக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை.எலும்புகள் உடைந்து முகம் வீங்கியுள்ளது.அறுவைசிகிச்ச ை செய்ய வேண்டும்,மதுரைக்கு கூட்டிச் செல்லுங்கள் என கூறப்பட்டுள்ளது.
என்மீது அதிக அக்கறை உள்ள என் குடும்பத்தார் என்னை மதுரையில் உள்ள அபோல்லோ தனியார் மருத்துவமனையில் சேர்க்க இரவு 1 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.முதலில் 25,000 ரூபாய் பணத்தை கட்டுங்கள் பிறகுதான் சிகிச்சை ஆரம்பிப்போம் என்றவுடன்,மதுரையில் உள்ள உறவினர்களிடம் பணம் வாங்கி கட்டியவுடன், 2மணிக்குச் அட்மிசன் பண்ணி அவர்களின் சிகிச்சையை(?) ஆரம்பித்துள்ளனர் [உஷராயிக்கட அருண்].
மூக்கில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த மூக்கின் இரு துவாரங்களிலும் பஞ்சை வைத்து அடைத்துள்ளனர்[மூச்சை எப்படிடா விடுறது?].சுவாசம் தடைபடவும் மாற்று வழியாக வாயின்மூலம் சுவாசத்தை நிறைவேற்றியுள்ளது தன்னிகரில்லா என் உடல்.,சுவாசிக்க சிரமபடுவதாக எண்ணியவர்கள் என் முகத்தில் ஆக்சிஜன் முகமூடியையும்(mask) மாட்டிவிட்டுள்ளனர்(இந்த நேரத்தில் எனக்கு தேவை இயற்கையான காற்றுதான்).
இதற்கிடையில் ஸ்கேன்,எக்ஸ்ரே,இ.சிஜி,பிளட ்டெஸ்ட்(ஒன்றுக்கும் உதவாத) எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மாஸ்க் மாட்டியும் சுவாசிக்க சிரமப்படுவதாகவும்,தொண்டையை
கிழித்து ஆக்சிஜன் குழாயிட வேண்டும் என்றும்,எலும்புகள் உடைந்திருப்பதால்
பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யவும் என் வீட்டாரிடம் அனுமதி
கேட்டுள்ளனர்.விபத்து கேள்விபட்டு இரவு 3 மணிக்கு மருத்துவமனைக்கு
வந்திருந்த நண்பர்கள் என் தந்தையிடம் அபோல்லோவின் பெருமைகளைக் கூறிள்ளனர்
[சொத்துகளை விற்றுத்தான் உள்ளே அனுமதிக்கபட்டவரை கூட்டி செல்ல வேண்டும்]
மருத்துவமனை நிர்வாகம் என் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்[உங்களால்தானே ],உடனே
ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவே உடனே 35000ரூபாய் கட்டுங்கள் சீக்கிரம்
என்றுள்ளனர்.என் தந்தை என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு
அனுமதிக்கவில்லை.ICUவில் இருப்பதாகவும்,யாரும் பார்க்க முடியாது எனவும்
கூறிவிட்டனர். பணத்தை ரெடி செய்துவிட்டு சொல்லவதாக என் வீட்டார் சொல்லவும்
காத்திருந்தனர் என்னை எதுவும் செய்யாமல்,
விபத்து நடந்து ஒருசில நொடிகளில் இயற்கை ஒரு மாபெரும் விந்தை நிகழ்த்தியிருந்தது.விபத்து
எப்படி நடந்தது என்று என் நினைவில் பதியவில்லை.முகத்தில்பட்ட அடியில்
ஏற்படும் கொடூரவலி எனக்கு தெரியாமல் இருக்க ஆழ்ந்த மயக்கத்துக்கு கொண்டு
சென்று முதல் உதவி ஆற்றியுள்ளது என் உடல்.
சுமார் 10 மணி நேர மயக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்தேன் நான்,ஒரு பெட்டில் படுத்திருந்தேன்.அருகில் சில பெட்டுகளும் அதில் சிலரும் படுத்திருந்தனர்.சுவர் கடிகாரம் 6.30ஐ காட்டியது.அங்கிருந்த டாக்டர்களும்,நர்ஸ்களும் நான் கண்விழிப்பதை பார்த்துவிட்டு என்னருகில் வந்துவிட்டனர்(எப்படிடா இவன் கண் முழிச்சான்).அவர்களிடம் நான் கேட்ட கேள்வி,
நான்:எங்கு இருக்கிறேன்?
பதில்:மதுரை அபோல்லோ.
நா:என்ன ஆச்சு எனக்கு?
ப:நீங்க வந்த பைக் அக்சிடென்ட்
நான்:எங்க?
பதில்:உசிலம்பட்டி.
நான்:சரி,நான் யூரின் போகணும்.பாத்ரூம் எங்க இருக்கு?
பதில்:உங்களுக்கு யூரின் போக ட்யூப் போட்ருக்கு.அப்படியே போங்க.நீங்க எந்திரிக்க கூடாது.
நான்:என்னால எந்திரிக்க முடியும்.இதை எல்லாம் கழட்டி விடுங்க(குளுக்கோஸ் மாஸ்க்).
பதில்:பேசாம படுங்க.உங்களுக்கு நிறைய ரத்தம் போயிருக்கு.இன்னமும் போயிட்ருக்கு.முகத்துல எலும்பு உடைந்திருக்கு.ஆபரேஷன் பண்ணனும்.நீங்க பேசக்கூடாது,எந்திரிக்க கூடாது.
நான்:நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.என்ன டிசார்ஜ் பண்ணுங்க.என் அட்டெண்டர கூப்பிடுங்க.
பதில்:உங்களுக்கு அட்டெண்டர் எல்லாம் யாரும் இல்ல.
நான்: அட்டெண்டர் இல்லாம எப்படி நீங்க என்ன அட்மிட் பண்ணிருப்பிங்க? அட்டெண்டர கூப்பிடுங்க. டிசார்ஜ் பண்ணுங்க.
பதில்:ஐயோ பேசாம படுங்க.டாக்டர் இவர் பேசிக்கிட்டே இருக்கார்.
அருகில் வந்த நர்ஸ் குளுக்கோஸ் மாட்டியிருந்த இடத்தில் எதோ ஒரு ஊசியை போட்டார்.நினைவு குறைந்து சில நிமிடத்தில் மயக்கத்திற்க்கு சென்று விட்டேன்.நான்கு மணி நேரம் கழித்து காலை 11 மணிக்கு நினைவு திரும்பிய நான்,திரும்ப பாத்ரூம் செல்ல முயற்சி செய்தேன்.ஓடிவந்த நர்சுகள் என்னை எழுந்திருக்க விடாமல் படுக்க வைத்தனர்.என்னை டிசார்ஜ் செய்யுமாறும், அட்டெண்டரை பார்க்க வேண்டும் என்று அனத்தி கொண்டிருந்தேன்.
எனது தொல்லை தாங்க முடியாமல் எனது உறவினர் ஒருவரையும்,நண்பர் ஒருவரையும் பார்க்க அனுமதித்தனர்.அவர்களிடம் எனக்கு செயற்கையாக மாட்டப்பட்டிருக்கும்(யூரின ்ட்யூப்,
குளுக்கோஸ்,ஆக்சிஜன் மாஸ்க்,)அனைத்தையும் கழட்டுமாறும்,என்னை வீட்டிற்கு
அழைத்து போகும் மாறும் கூறினேன்.வீட்டிற்கு கூட்டி செல்ல டாக்டரிடம்
பேசிக்கொண்டிருப்பதாகவும்,அ துவரை
பொறுத்துக் கொள்ளுமாறும் கூறினர்.அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே
இருக்கும்போது வாந்தி ஏற்பட்டடு ரத்தமும், விபத்துக்கு சிறிது முன் உண்ட
உணவும் செரிக்காமல் வெளியே வந்தது.[விபத்து நடந்ததும் உடல் செரிமானத்தை
நிறுத்திவிட்டு,காயப்பட்ட பகுதிகளைக் சரிப்படுத்தும் வேலைகளில் இருந்தால்
செரிக்காமல் கழிவாக இரைப்பையில் இருந்த உணவை உடல் வாந்தி மூலம்
வெளியேற்றியது].(வாந்தி எடுத்து படுக்கையை அசுத்தம் செய்தற்காக 8000 ரூபாய்
பில் போட்டது தனிக்கதை).
வாந்தி எடுத்ததும் திரும்பவும் ஒரு ஊசி மயங்கி விட்டேன்.திரும்ப கண் முழிக்கும்போது மாலை 4 மணி,விழித்ததும் வழக்கமான கோரிக்கைதான், டிசார்ஜ் செய்யுங்கள், அட்டெண்டர கூப்பிடுங்கள். , டிசார்ஜ் செய்ய டாக்டரிடம் சொல்லி விட்டதாகவும்,இன்னும் 1/2மணி நேரத்தில் போய்விடலாம் என்றும் உறவினர் சொல்லவும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.3மணிக்கெல்லாம் டீசார்ஸ் செய்து விட்டதாக ரிப்போர்ட் எழுதிய மருத்துவமனை நிர்வாகம் 6மணிக்கு மேல்தான் அனுப்பியது. மருத்துவமனையிலிருந்து நடந்தே செல்வதாக கூறிய என்னை ஸ்டேரக்சரில் படுக்கவைத்தே ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.[ICUவில் இருந்து கத்தி படாமா வெளியே வந்ததே கஷ்டம் இதுல நான் நடந்துபோன ICUவிற்கு உள்ள மரியாதை என்னவாகும்?]
மதுரையில் இருந்து என் சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ்........
ஆக்சிடண்டும் அக்குபங்சரும் என் வாழ்வில்-1
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர் கம்பம் சென்டரில்2013ம் ஆண்டு மாணவனாக, அக்குபங்ச்சர் எனும் தொடுசிகிச்சை அறிவியல் படித்து கொண்டிருந்தேன், அப்பொழுது வானகம் கருப்பசாமி மற்றும் தாய் வழி இயற்கை உணவகம் மாறன்ஜி ஒருங்கிணைப்பில் சிவகாசியில் 3 நாட்கள் நடைபெற்ற மரபுவழி மருத்துவ முகாமில் கலந்துகொண்டுவிட்டு ஆங்கில மருத்துவம் மனித குலத்திற்கு எவ்வளவு கேடானது என்ற சிந்தனையுடன் 29-12-2013 அன்று மாலை சிவகாசியிலிருந்து ஆண்டிபட்டிக்கு என்னுடைய டூவிலரில் வந்து கொண்டு இருக்கும்போது சுமார் 8.30 மணியளவில் உசிலம்பட்டி அருகில் பூச்சிபட்டி என்னும் ஊருக்கருகில் வந்ததுவரை என் நினைவில் உள்ளது.

என் நினைவு மறக்கடிக்கப்பட்ட நொடியில் நான் ஒரு பெருவிபத்தை சந்தித்திருக்கின்றேன்.ஆம் சாலையின் அருகில் பள்ளி இருப்பதால் சாலையின் குறுக்கே போலீசாரால் வைக்கபட்டிருக்கும் பேரி கார்டர்(இரும்பு தடுப்பு),எதிர்புறம் வந்த வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தால் தெரியாததனால் நான் வந்த 50-60கீ.மீ வேகத்தில் அந்த பேரி கார்டரில் என் பைக்கின் முன் சக்கரம் மோதி,எனது முகம் இரும்பு கம்பியில் அடிபட்டு மூக்கிலும்,காதிலும் ரத்தம் வெளியேறியது.தலைகவசம்(ஹல்மெ
பொதுமக்கள் வழக்கம்போல் 108க்கும்,என் வீட்டிற்கும் போன் செய்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் என்னை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.1மணி நேரம் கழித்து வந்த என் வீட்டார்களிடம் இவருக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை.எலும்புகள் உடைந்து முகம் வீங்கியுள்ளது.அறுவைசிகிச்ச
என்மீது அதிக அக்கறை உள்ள என் குடும்பத்தார் என்னை மதுரையில் உள்ள அபோல்லோ தனியார் மருத்துவமனையில் சேர்க்க இரவு 1 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.முதலில் 25,000 ரூபாய் பணத்தை கட்டுங்கள் பிறகுதான் சிகிச்சை ஆரம்பிப்போம் என்றவுடன்,மதுரையில் உள்ள உறவினர்களிடம் பணம் வாங்கி கட்டியவுடன், 2மணிக்குச் அட்மிசன் பண்ணி அவர்களின் சிகிச்சையை(?) ஆரம்பித்துள்ளனர் [உஷராயிக்கட அருண்].
மூக்கில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த மூக்கின் இரு துவாரங்களிலும் பஞ்சை வைத்து அடைத்துள்ளனர்[மூச்சை எப்படிடா விடுறது?].சுவாசம் தடைபடவும் மாற்று வழியாக வாயின்மூலம் சுவாசத்தை நிறைவேற்றியுள்ளது தன்னிகரில்லா என் உடல்.,சுவாசிக்க சிரமபடுவதாக எண்ணியவர்கள் என் முகத்தில் ஆக்சிஜன் முகமூடியையும்(mask) மாட்டிவிட்டுள்ளனர்(இந்த நேரத்தில் எனக்கு தேவை இயற்கையான காற்றுதான்).
இதற்கிடையில் ஸ்கேன்,எக்ஸ்ரே,இ.சிஜி,பிளட
விபத்து நடந்து ஒருசில நொடிகளில் இயற்கை ஒரு மாபெரும் விந்தை நிகழ்த்தியிருந்தது.விபத்து
சுமார் 10 மணி நேர மயக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்தேன் நான்,ஒரு பெட்டில் படுத்திருந்தேன்.அருகில் சில பெட்டுகளும் அதில் சிலரும் படுத்திருந்தனர்.சுவர் கடிகாரம் 6.30ஐ காட்டியது.அங்கிருந்த டாக்டர்களும்,நர்ஸ்களும் நான் கண்விழிப்பதை பார்த்துவிட்டு என்னருகில் வந்துவிட்டனர்(எப்படிடா இவன் கண் முழிச்சான்).அவர்களிடம் நான் கேட்ட கேள்வி,
நான்:எங்கு இருக்கிறேன்?
பதில்:மதுரை அபோல்லோ.
நா:என்ன ஆச்சு எனக்கு?
ப:நீங்க வந்த பைக் அக்சிடென்ட்
நான்:எங்க?
பதில்:உசிலம்பட்டி.
நான்:சரி,நான் யூரின் போகணும்.பாத்ரூம் எங்க இருக்கு?
பதில்:உங்களுக்கு யூரின் போக ட்யூப் போட்ருக்கு.அப்படியே போங்க.நீங்க எந்திரிக்க கூடாது.
நான்:என்னால எந்திரிக்க முடியும்.இதை எல்லாம் கழட்டி விடுங்க(குளுக்கோஸ் மாஸ்க்).
பதில்:பேசாம படுங்க.உங்களுக்கு நிறைய ரத்தம் போயிருக்கு.இன்னமும் போயிட்ருக்கு.முகத்துல எலும்பு உடைந்திருக்கு.ஆபரேஷன் பண்ணனும்.நீங்க பேசக்கூடாது,எந்திரிக்க கூடாது.
நான்:நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.என்ன டிசார்ஜ் பண்ணுங்க.என் அட்டெண்டர கூப்பிடுங்க.
பதில்:உங்களுக்கு அட்டெண்டர் எல்லாம் யாரும் இல்ல.
நான்: அட்டெண்டர் இல்லாம எப்படி நீங்க என்ன அட்மிட் பண்ணிருப்பிங்க? அட்டெண்டர கூப்பிடுங்க. டிசார்ஜ் பண்ணுங்க.
பதில்:ஐயோ பேசாம படுங்க.டாக்டர் இவர் பேசிக்கிட்டே இருக்கார்.
அருகில் வந்த நர்ஸ் குளுக்கோஸ் மாட்டியிருந்த இடத்தில் எதோ ஒரு ஊசியை போட்டார்.நினைவு குறைந்து சில நிமிடத்தில் மயக்கத்திற்க்கு சென்று விட்டேன்.நான்கு மணி நேரம் கழித்து காலை 11 மணிக்கு நினைவு திரும்பிய நான்,திரும்ப பாத்ரூம் செல்ல முயற்சி செய்தேன்.ஓடிவந்த நர்சுகள் என்னை எழுந்திருக்க விடாமல் படுக்க வைத்தனர்.என்னை டிசார்ஜ் செய்யுமாறும், அட்டெண்டரை பார்க்க வேண்டும் என்று அனத்தி கொண்டிருந்தேன்.
எனது தொல்லை தாங்க முடியாமல் எனது உறவினர் ஒருவரையும்,நண்பர் ஒருவரையும் பார்க்க அனுமதித்தனர்.அவர்களிடம் எனக்கு செயற்கையாக மாட்டப்பட்டிருக்கும்(யூரின
வாந்தி எடுத்ததும் திரும்பவும் ஒரு ஊசி மயங்கி விட்டேன்.திரும்ப கண் முழிக்கும்போது மாலை 4 மணி,விழித்ததும் வழக்கமான கோரிக்கைதான், டிசார்ஜ் செய்யுங்கள், அட்டெண்டர கூப்பிடுங்கள். , டிசார்ஜ் செய்ய டாக்டரிடம் சொல்லி விட்டதாகவும்,இன்னும் 1/2மணி நேரத்தில் போய்விடலாம் என்றும் உறவினர் சொல்லவும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.3மணிக்கெல்லாம் டீசார்ஸ் செய்து விட்டதாக ரிப்போர்ட் எழுதிய மருத்துவமனை நிர்வாகம் 6மணிக்கு மேல்தான் அனுப்பியது. மருத்துவமனையிலிருந்து நடந்தே செல்வதாக கூறிய என்னை ஸ்டேரக்சரில் படுக்கவைத்தே ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.[ICUவில் இருந்து கத்தி படாமா வெளியே வந்ததே கஷ்டம் இதுல நான் நடந்துபோன ICUவிற்கு உள்ள மரியாதை என்னவாகும்?]
மதுரையில் இருந்து என் சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ்........

0 comments:
Post a Comment