மதுரையில் இருந்து என் சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ்.........
15 மணி நேரத்தையும், 35,000ரூபாய்க்கும் மேல் வெட்டியாக செலவு செய்து விட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள், நான் ICUவில் இருந்த போது என் முகத்தை பார்க்க விரும்பினேன், முகம் மிகவும் வீங்கியுள்ளதாலும், மூக்கில் ரத்தம் வருவதாலும் நான் பார்த்து பயந்துவிடுவேன் என்று அனுமதிக்கவில்லை, குடிக்க தண்ணீர் கேட்டேன் அதுவும் கொடுக்கப்படவில்லை, எனவே முதல் வேலையாக ஆம்புலன்ஸில் ஏறியதும் தண்ணீர் கேட்டேன், அதற்கு, தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் எனவே குடுக்க கூடாது என்று மருத்துவமனையில் சொல்லியுள்ளார்கள், நானோ பயங்கர தாகத்தில் இருந்தேன், சில நிமிட வற்புறத்தலுக்கு பிறகு வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணீர் கொடுத்தார்கள், தாகம் அடங்கினாலும் அது போதவில்லை எனக்கு, என் முகத்தை காண போட்டோ எடுக்குமாறு உடன் இருந்த masatan jee அண்ணணீடம் சொல்லி அவர் எடுத்த போட்டோதான் போன பதிவில் நீங்கள் பார்த்தது,
அடுத்து எனது குரு கம்பம் அகாடெமி ஆப் அக்குபங்சரின் நிறுவனர் அக்கு ஹீலர் ”போஸ்K.முகம்மது மீரா” அவர்களிடம் பேச வேண்டும் என சொல்லவும் என் தந்தை அவருக்கு போன் செய்தார், விபத்து நடந்தது எற்கனவே அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததுது. திருச்சி கொண்டு செல்வதாக என் தந்தை அவரிடம் கூறியதும் வீட்டிற்கு அழைத்துசென்று ஓய்வில் வைத்திருக்குமாறும், விரைவில் அருண் குனமடைவார் என்றும், அடுத்ததாக என்னிடமும் பேசினார். “அருண் ஒன்றும் பயப்பட வேண்டாம், ஒரு வாரத்தில் எல்லாம் சரி ஆகிடும்” என்றார், ஒரு வாரம் இல்லை, மூன்று நாட்களில் சரி ஆகிடும் சார் என்றேன் நான்.
பிறகு ஆம்புலன்ஸ்ஸில் உடன் வந்த நண்பர்கள் உறவினர்களிடம் பேசிக்கொண்டே தூங்கி விட்டேன், 1.30 மணிநேரம் கழித்து விழித்து பார்த்தேன், வண்டி திருச்சியை அடைந்திருந்தது, ஆனால் வீட்டிற்க்கு செல்லும் சாலையில் செல்லாமல் வேறு சாலையில் சென்று கொண்டிருந்தது. திடுகிட்ட நான் என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்? என்றேன், மூக்கில் ரத்தம் வந்துகொண்டே இருப்பதால் அதை மட்டும் நிறுத்துவதற்காக மருத்துவமனை கூட்டி செல்வதாகவும், ரத்தம் வருவது நின்ற பின் வீட்டிற்க்கு போகலாம் என்றனர்.
உடல் ஒருபோதும் தனக்கு தேவையுள்ளதை வெளியேற்றாது, தேவையற்றதை மட்டுமே வெளியேற்றும். தற்போது வெளியேறிக்கொண்டிருக்கும் ரத்தமும் அடிபட்ட இடத்தில உள்ள இறந்த திசுக்களை(cells) வெளியேற்றி கொண்டுள்ள தேவையற்ற ரத்தமாகும், மேலும் காயம்பட்ட இடத்தில புது திசுக்களை உருவாக்கும் உடலின் சுயசிகிச்சையாக நிணநீர் கட்டியுள்ளதால் முகம் வீக்கமாக உள்ளது. எனக்கு தற்போது தேவை ஓய்வு மட்டுமே, உங்களையும்,டாக்டரையும் விட எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய என் உடல் தானே சிகிட்சையில் உள்ளது என்று உடல் பற்றிய உண்மைகளை சொன்னேன். என் பேச்சை புரிந்து கொண்டாலும், அவர்களுக்கு பழக்கமான ஆங்கில மருத்துவத்தின் பயமுறுத்தலில் இருந்து வெளி வர இயலவில்லை. மூக்கிலே கசிந்து கொண்டிருந்த ரத்தம் அவர்களை மேலும் பதற்றமடைய செய்தது.
வேனில் நான் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் என் வீட்டார்களும், நண்பர்களும் பேசி ஒரு முடிவு எடுத்திருந்தனர், திரும்பவும் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அவர்கள் பணத்தை பிடுங்குவதற்காக பொய் சொல்லலாம், எனவே முதலில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பது என்றும் அங்கு சொல்வதை பொருத்து அடுத்து பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர், என் பெற்றோர்களின் வருத்ததினாலும், நண்பர்களின் வற்புறுத்தலினாலும் அவர்களுக்கு புரியும் வரை அவர்களுக்கு ஒத்துழைப்பது போல நடிப்பது என்று நான் ஒரு முடிவு செய்திருந்தேன்,
திருச்சி அரசு மருத்துவமனையை அடைந்ததும் வேனில் இருந்து இறங்கி நடக்க முயற்சித்தேன் நான், சில அடிகளுக்கு மேல் என்னால் நடக்க முடியவில்லை, நிலை தடுமாறினேன். [“என் உடல் தனக்கு எற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய தன்னுடைய மூன்று முக்கிய பணியான 1,செரிமானம்2,இயக்கம்3,பராமரிப்பில் அவசர சிகிச்சைகாக தன் பராமரிக்கும் சக்தியுடன் இயக்க சக்தியையும், செரிமான சக்தியையும் சேர்த்து எடுத்து கொண்டுள்ளதால் என்னால் இயங்க(நடக்க) முடியவில்லை”] நண்பர்கள் வீல் சேரை எடுத்து வந்து அவசர பிரிவில் சேர்த்தனர். பிறகு, அவர்களின் வழக்கமான செய்முறைகளை செய்து விட்டு சிறப்பு மருத்துவருக்காக காத்திருக்க சொன்ன மருத்துவ பணியாளர்கள், எங்களை கண்டு கொள்ளவில்லை[தப்பிச்சேன் என்று நினைத்தேன்].
எனக்கு திரும்பவும் அதிக தாகம், தண்ணீர் கேட்டேன். மூடியில் குடுத்த தண்ணிரை ஒதுக்கி விட்டு வாட்டர்பாட்டிலை பிடிங்கி குடித்தேன், [அப்பாடா தாகம் தணிந்தது], உடனே தலை சுற்றுவதை போல இருந்ததும் படுத்துவிட்டேன், [தண்ணீரை செரிப்பத்ற்காக பராமரிக்கும் சக்தியிலிருந்து சிறிது சக்தி எடுத்ததால்] சிறிது நேரத்தில் மலம் கழிப்பதற்கான உணர்வுள்ளதாக சொன்னேன், அப்படியே போகும்படி சொன்னார்கள், அப்பொழுதுதான் கவனிக்கிறேன் என் இடுப்பில் டையாபர்ஸ் இருப்பதை, முதலில் அதை கழட்டிவிட்டு கழிவறையை நோக்கினேன், எழுந்து நடக்க வேண்டாம் என்றும், வேறு ஏற்பாடு செய்வதாய் கூறியதையும் மறுத்துவிட்டு நண்பரின் உதவியோடு கழிப்பறையில் உடலின் கழிவுநீக்கத்தை முடித்தேன்.
நண்பர் ஒருவர் தனது நண்பரான ரயில்வேயில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை கூட்டி வந்தார், மதுரை அப்போலோவில் எடுக்கப்பட்ட ரிப்போர்ட்களையும் என்னையும் பார்த்துவிட்டு, என் பெற்றோரிடம் பயப்பட தேவையில்லை, மூக்கில் ரத்தம் வருவது குறைந்து விடும், முகத்தில் எலும்பு உடைந்துள்ளது அதற்க்கு மட்டும் ஆப்ரேசன் செய்து பிளேட் வைக்க வேண்டும், என்று சொல்லிவிட்டு சென்றார், அரசு மருத்துவமனையின் கவனிப்பில்லா சிகிச்சையைகண்டு அதிருப்தியுற்ற என் வீட்டார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையான KMC –ல் சேர்க்க அடுத்த ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள் என்னை....
KMC மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, ஓரளவிற்கு நன்றாக பேசவும், எழுந்து நிற்கவும் முடிந்த நிலையில் இருந்தேன், எனக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களிடமும், நர்ஸ்களிடமும் எனக்கு ஒன்றும் இல்லை எந்த மருத்துவ உதவியும் தேவை இல்லை, என்னை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று வாதம் செய்தேன், சரி என்று என்னிடம் சொல்லிவிட்டு, சாப்பிடாமல் இருப்பதால் குளுக்கோஸ் ஏற்றவேண்டும் என்று உடன் உள்ளவர்களிடம் சொல்லி என் விருப்பம் இல்லாமல் ஏற்றினர், மூக்கில் இருந்து வரும் ரத்தம் குறைந்து விட்டதாகவும், அடிபட்டதில் மூளையில் இருந்து நீர் கசிவதால்(?) அது நிற்கும்வரை முகத்தில் ஆப்பரேசன் செய்வது கடினம், 2நாள் பொருத்து பிறகு செய்யலாம், அதற்குள் என்னை ஆப்பரேசனுக்கு ஒத்துழைக்குமாறு சமாதானபடுத்த சொல்லியுள்ளார்கள் என்னை சார்ந்தவர்களிடம்.
நான் அங்கு இருந்த அந்த 2 நாட்களும் என்னை சந்திக்கவந்த உறவினர்களும், நண்பர்களும் என்னை அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க நிறைய அறிவுரைகளையும், பயமுறுத்தலையும் வெளிப்படுத்திகொண்டே இருந்தனர், நான் அவர்களிடமெல்லாம் கேட்டது, நாம் அம்மா வயிற்றில் இருக்கும்போது நம்முடைய எலும்புகளை தேவைக்கேற்ப நேராகவும், வளைத்தும் வைத்தது எந்த டாக்டர்? யாரிடமும் இருந்தும் சரியான பதில் வரவில்லை,நீ கேட்பதற்க்கு எங்களுக்கு பதில் தெரியாது,டாக்டரிடம் கேட்டுக்கொள் என்றனர்.
அவரிடமும் கேட்டேன், அறுவைசிகிட்சை செய்து பிளேட் வைத்தால்தான் உடைந்த எலும்பு இணையுமா? தானே இணையாதா என்று, தானே இணையும் ஆனால் சரியாக இணையாமல் மாறிவிட்டால் முக அமைப்பு மாறிவிடும், உடைந்திருக்கும் (maxilla )மேல் தாடை எலும்பு உணவை மெல்லுவதற்கு முக்கியம், அறுவை சிகிட்சை செய்து பிளேட் வைத்தால்தான் பழையபடி உண்ண முடியும், என்று அவர் படித்திருந்த ஆங்கில மருத்துவ படிப்பறிவில் இருந்து பேசினார். இவ்வாறான பல விவாதங்களுக்கு பிறகு என் அப்பாவிடம் ஒரு நிபந்தனை வைத்தேன், 4நாட்கள் மட்டும் நான் சொல்வதை அவர்கள் கேட்குமாறும் அதற்குள் நான் குனமடைவேன் என்றும் அதில் உடல்நிலை முன்னேற்றம் இல்லை என்றால் அறுவைசிகிச்சைக்கு சம்மதிகிறேன் என்றேன், இந்த நிபந்தனையை ஏற்று கொண்டு மருத்துவமனையில் பேசி டிசார்ஜ் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்தனர் உண்மையாக.......

0 comments:
Post a Comment