சிசேரியனில் தமிழகம் இரண்டாவது இடம்! மத்திய அரசிடம் புகார்.

 இந்த மனித குலத்தில் தனக்கு  உயிரை  கொடுத்ததே  பெண்ணின் கருவறைதான்
 பணத்தின் வெறியால் உயிரை  கொடுத்த கருவறைக்கு துரோகம் செய்வதற்கு
 உயிரை துறந்துவிடலாம் பணமோக மருத்துவர்களே!



தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, சிசேரியன்மூலம் குழந்தைகள் பிறப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இதனைத் தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சுபர்ணா கோஷ் என்பவர், இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியைச் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில், உலக நாடுகளில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரைதான் சிசேரியன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் ஆய்வறிக்கையின்படி சிசேரியன்மூலம் குழந்தைகள் பிறப்பதில் தெலுங்கானா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு, 58 சதவிகிதம் சிசேரியன் நடைபெறுகிறது. 34.1 சதவிகிதத்தில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில், கடந்த 2005-06-ம் ஆண்டில் 20.3 சதவிகிதமாக இருந்தது. 2015-16-ம் ஆண்டில் அது 34.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் சிசேரியன் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்.

மருத்துவமனைகள், பணத்துக்காக சிசேரியன் முறையைக் கையாள்கின்றன. சிசேரியன் செய்யும் மருத்துவர் பெயரையும் மருத்துவமனைகள் வெளியிட வேண்டும். எவ்வளவு சிசேரியன் நடந்தது என்ற தகவலையும்  மருத்துவமனைகள் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பணத்தின் வெறியால் மருத்துவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகம் இரக்கமற்றதாக மாறிவிட்டது.. மருத்துவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால் மட்டுமே சுகப்பிரசவம் அல்லது  சிவாரிசு செய்தால் மட்டுமே.

 பயத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு நடத்தப்படும் இந்த பணவேட்டையில் சிக்கி தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு உடல் ரீதியான தொந்தரவுகளை அனுபவிப்பதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியும் ?

 நீங்கள் கத்தியை எடுத்து கிழிக்கும் போது சதை தெரியவில்லையா?
ஒரு பெண்ணை அடிப்பதே பாவம் என்று சொல்லலும் மண்ணில் கத்தியால் இரக்கமற்று அவள் வயிற்றை கிழிப்பதற்கு கைகள் கூசவில்லையா?
ஒரு பிஞ்சு குழந்தை அதன் வாழ்வில் விளையாடுவது உங்களுக்கு விளையாட்டா?

சிந்தும் உதிரம் உதிர்வதை  கண்டும் உங்கள் இதயம் பதறாமல் வேடிக்கை பார்ப்பதால் உங்கள் இதயம்  இறந்துவிட்டதா? அப்படி என்றால் நடைப்பிணமாக பணத்திற்காக  அலையும்  சவமா நீங்கள்?



இறைவளில் இனிய சுகப்பிரசவம் புத்தகம் மற்றும்  நமது தலத்தில் உள்ள சுகப்பிரசவ கட்டுரைகளை படியுங்கள்

0 comments:

Post a Comment