ஆஸ்துமா - காசநோய் முழுமையாக குணபடுத்த முடியும் நோய்களே..!

ஆஸ்துமா - காசநோய் முழுமையாக குணபடுத்த முடியும் நோய்களே..!

சமீபத்தில் சகோதரி சுனிதா ராணி அவர்களின் போஸ்ட்டில் நண்பர் Madhava Prakash அவர்கள் என்னை டாக் செய்தார், அந்த போஸ்ட் தான் என்னை இந்த கட்டுரை எழுத தூண்டியது.

அந்த கட்டுரையில் -“இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.” -என்று குறிப்பிட்டு இருந்தார்.

"ஆஸ்துமா - இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்." என்ற இந்த வரிகள் ஆங்கில மருத்துவத்தின் கையாலாக தனத்தைதான் காட்டுகிறது.

ஏன் என்றால் முதன் முதலில் எப்போது சளி தொடங்கியதோ அன்றே அதனை சும்மா விட்டு இருந்தால் அப்போதே முழுமையான சளி கழிவுகள் வெளியேறி இருக்கும், ஆனால் சளியை நிறுத்த கொடுக்கும் மருந்துகள் அதனை கெட்டியாக மாற்றி பொடி ஆக்கி நுரையீரலின் நுண் துளைகளில் அடைத்து வைக்கிறது. எனவே நமக்கு சளி குறைந்தது போல தோன்றும், பின் உடல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தவுடன் அந்த சளியை வெளியேற்ற முயற்சி செய்கிறது, ஆனால் இப்போது சளி பொடி ஆக்கப்பட்டு நுரையீரலில் ஒட்ட பட்டுள்ளதால் இருமலை உருவாக்குகிறது. ஆனால் இப்போது அதனை தவறாக நினைக்கும் மருத்துவம் அந்த இருமலை நிறுத்த மருந்து கொடுக்கிறது. இப்போது உடல் ஒரு நல்ல சுத்தமான நீரை குடிக்கும் போதோ அல்லது மழையில் நனையும்போதோ அல்லது நல்ல பழங்களை சுவைக்கும்போதோ உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க படுகிறது. அப்போது உடல் மீண்டும் அந்த சளி கழிவை வெளியேற்ற முயற்சி செய்கிறது. ஆனால் இப்போது மருத்துவம் கூறுகிறது இந்த பொருள்கள் எல்லாம் உங்களுக்கு ஒவ்வாது என்று [ஏன் என்றால் இப்போது தான் சளி பிடிக்கிறதே...!]. இந்த நிலை மேலும் மேலும் தொடரும் போதுதான் தொடர் சளி - இருமல் - ஆஸ்துமா - காசநோய் என்று நோய்கள் வளர்க்கபடுகிறது. இதனை தீர்க்க முடியாததால் அதனை மறைக்க இன்று ஒவ்வொரு நோய்க்கும் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது. நாமும் அதனை ஏற்றுக்கொண்டு கொடி பிடித்து ஊர்வலம் வருகிறோம். என்ன கேவலம் இது.

"ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை." - எப்படி முடியும்.

இப்படி ஒரு சதாரணமாக வெளியேறவேண்டிய சளியை உள்ளேயே மருந்துகளை கொண்டு அடக்குவதன் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு புதிய பெயர் சூட்டி, அதனை குணப்படுத்த முடியாத வியாதியாக கூறி ஆங்கில மருத்துவம் மகிழ்கிறது.

சகோதரி கூறியது போல "மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை" நுரையீரல் தனக்குள் தேங்கிய சளி கழிவுகளை வெளியேற்றும் ஒரு நல்ல முயற்சியே ஆனால் அதனை அறியாத ஆங்கில மருத்துவம் சிகிச்சை என்ற பெயரில் இந்த அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்து அவற்றை கட்டுப்படுத்த பார்க்கிறது. எனவேதான் எந்த ஒரு வியாதிக்கும் ஆங்கில மருத்துவத்தில் நிரந்தர குணம் கிடைப்பதில்லை.

உடலின் ஆரோக்யதை நோயாக நினைக்கும் ஒரு முட்டாள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் மட்டுமே, மேலும் இதன் பிரமாண்டதால் மக்களை மதி மயக்கி உயிர் உள்ளவரை சீரழித்து சாகடிக்கிறது என்பதே அப்பட்டமான உண்மை.

என் தனிப்பட்ட அனுபவத்தில் என்னிடம் அக்குப்பங்சர் சிகிச்சைக்கு வருபவர்கள் ஆங்கில மருத்துவத்தால் குணபடுத்த முடியாது என்று கூறப்படும் அனைத்து வியாதிகளும் முழுமையான குணம் கிடைக்க பெறுவதை கண்கூட பார்க்கும்போது, ஆங்கில மருத்துவம் கூறும் காரணங்கள் வெறும் கேலி கூத்தாகதான் தெரிகின்றது. [நோயாளி - நம்மல நம்பவச்சு காமெடி பண்ணிட்டு இருகாங்கலோ...?].





Image may contain: one or more people and text இதனை படிக்கும் நண்பர்கள்/சகோதரிகள் யாராவது தாங்களே அக்குப்பங்சர் சுய சிகிச்சை செய்துகொள்ள விரும்பினால் என்ன டைம்லைன்ல் உள்ள "வீட்டுக்கு ஒரு மருத்துவர்" புத்தகம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்

-RK Acu (https://www.facebook.com/rkacu)

0 comments:

Post a Comment