உடலின்
உள்ளே நிகழும் இயக்கமே – நோய்க்கான காரணத்தை தீர்மானிக்கிறது. உடலின்
வெளியே நடைபெறும் எந்த ஒரு மாற்றமும் நோயை ஏற்படுத்தாது. முதலில் நாம்
அம்மை மற்றும் மலேரியா நோய்கள் பற்றிய கதைகளை அறிவது வசதியாயிருக்கும்.

அம்மைநோய் வந்தால் நாம் ஆண்டாண்டு காலமாய் என்ன செய்து வருகிறோம்?
‘மாரியம்மன் விளையாட்டு’ என்று நம்பி எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயத்தில் – வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளிர்விக்கவும் செய்கிறோம். அம்மை வந்த வீட்டில் ‘தாளிக்கவே’ கூடாது என்றும் கிராமங்களில் கூறுவார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? அம்மைநோய் வந்தவருக்கு சமைத்த உணவுகள் தரக்கூடாது; இயற்கையான பழங்கள் போன்றவற்றை அதிகமாகத் தர வேண்டும் என்று பொருள்.
ஆக, என்ன செய்கிறோம் என்பதோடு – சிறிது கால ஓய்விற்குப் பிறகு அம்மை என்ன ஆகிறது? என்பது தான் முக்கியமானது.
மேற்சொன்ன பழக்கங்களை தெய்வ காரியம் என்ற எண்ணத்தோடு கட்டாயமாகக் கடைபிடிக்கிறோம். நோய் முற்றிலும் நீங்கி பூரண ஆரோக்கியம் பெறுகிறோம். எந்த ஒரு மருந்துமின்றி – விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அம்மை எப்படி குணமாகிறது?
பசிக்கிற போது – பழங்களையும், நோய் தீவிரமாக உள்ள போது முழு ஓய்வையும் நாம் உடலிற்குத் தருகிறோம். முழுமையான கழிவு நீக்கம் பெற்று உடல் நலம் திரும்புகிறது.
சரி; அம்மை நோய் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது?
“அம்மைநோய் நீரில் பரவும் கிருமிகளால் ஏற்படுகிறது. நீரிலிருக்கும் கிருமிகள் – நம் உடலினுள்ளே சென்று அம்மை நோயை ஏற்படுத்துகிறது” – என்று கூறுகிறது.
அப்படியானால், கிருமிகளைக் கொல்லும் (Antibiotics) ரசாயன மருந்துகள் எதுவும் சாப்பிடாத நிலையில் அம்மை எப்படி குணமானது?
எழுத்தாளர் தமிழ்வாணன் 1964 இல் இயற்கை மருத்துவம் பற்றி எழுதும் போது கீழ்க்கண்டவாறு இதைக் குறிப்பிடுகிறார்.
“அம்மை நோய் – மாரியம்மனால் ஏற்படுகிறது என்று நம்பும் கிராமத்து மக்களின் நம்பிக்கையும், அம்மை நோய் – கிருமிகளால் ஏற்படுகிறது என்று நம்பும் படித்தவர்களின் நம்பிக்கையும் – மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை.”
நம்முடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? கிருமிகளால் நோய் ஏற்படுவதில்லை. மருந்துகளால் நோய் குணமாவதுமில்லை – என்பது தானே?
அம்மை நோய் மட்டுமல்ல; மஞ்சள் காமாலைக்கும் நாம் ரசாயன மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை, மஞ்சள் காமாலையும் – கிருமிகளால் ஏற்படுவதாகவே மருத்துவ விஞ்ஞானம் இன்றும் கூறிவருகிறது!
அம்மைக்கு – வேப்பிலையும், மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி போன்ற மூலிகைகளையும் கொடுக்கிறார்களே? அவை கிருமிநாசினிகள் என்று கூட வாதம் உண்டு.
இதைக்கூட இப்போதைக்கு ஏற்கலாம்! ஏனெனில், ரசாயன மருந்துகளின்றி கிருமிகள் கொல்லப்படுவதை ஏற்கிறார்கள் அல்லவா?
நல்ல முன்னேற்றம் தான்!
சரி; நாம் மலேரியாவுக்கு வருவோம்.
மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது – “மலேரியா காய்ச்சலுக்குக் காரணம் – மலேரியா கிருமிகள் (Malaria Parasites). இக்கிருமிகளைக் கொல்லும் ரசாயனங்கள் தராமல் மலேரியாவிலிருந்து விடுபட முடியாது”
மலேரியாவுக்குக் காரணம் கிருமிகள் என்பதை விஞ்ஞானம் எப்போது கண்டுபிடித்தது?
1864 – இல் தான் கிருமிகளைப் பற்றிய முதல் அறிவிப்பு லூயிஸ் பாஸ்டரால் வெளியிடப்படுகிறது. பின்பு, ஒவ்வொரு நோயாக பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான காரணங்களாக – கிருமிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது. இந்த வரிசையில் மலேரியாவுக்கும் கிருமி கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு கிருமிக் கொல்லி மருந்துகள் 1929 – இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
முதல் கிருமிக் கொல்லி (Antibiotic) மருந்தான பென்சிலின் – பயங்கரமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இப்போது விஞ்ஞானம் அறிவித்திருப்பது வேறு விசயம்.
அப்படியானால், மலேரியாவிற்கான மருந்து 1930 களுக்குப் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இது இப்படியே இருக்க – மருத்துவ வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கிப் போவோம்.
கி.பி. 1795 – இல் டாக்டர். சாமுவேல் ஹானிமானால் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக ஹோமியோபதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த முதல் ஹோமியோபதி மருந்து – சின்ஹோனா(Cinhona).
இது - எந்த நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? மலேரியாவிற்குத்தான்!
1795 முதல் இன்று வரை ஹோமியோபதி மருத்துவர்கள் மலேரியா உள்பட பல்வேறு நோய்களுக்கு இம்மருந்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.
இங்குள்ளவை – மருத்துவ வரலாறு. அதன் முரண்பாட்டைக் கவனியுங்கள்!
• மலேரியாவிற்கு கிருமிகள்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது – 1864 – இல்.
• மலேரியாவை – கிருமிகளைப் பற்றிய பயமே இல்லாமல் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது – 1795 இல்!
ஏற்கெனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய்க்கு – 70 ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு காரணமும், பின்னர் நேர்மாறான இன்னொரு மருந்தும் கண்டுபிடிக்கப்பட என்ன காரணம்?
இது மருத்துவ உலகின் அரசியலாகும். அதற்குள் நாம் போக வேண்டியதில்லை.
மேற்கண்டவற்றிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? உடலின் அகக் காரணங்களே – நோய்க்கு காரணமாக இருக்கிறது. புறக்காரணங்களில் உண்மையில்லை.
இன்னொரு விஷயத்தை நாம் பார்த்து விட்டு, கிருமிகள் பற்றிய சான்றுகளுக்குச் செல்வோம்.
தோலில் வெண்மையாக ஏற்படும் தேமல் நோய் (Leucoderma) பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். அதற்கும் ஒரு கிருமி தான் காரணம் என்று கூறி, அக்கிருமிகள் உருவம், இயக்கம் பற்றிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். பின்பு, அக்கிருமிகளைக் கொல்லும் ரசாயனமும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தான் 1984 வரை அனைவரும் பயன்படுத்தினர். நோயின் தன்மையில் இந்த ரசாயனம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு கண்டுபிடிக்கப்பட்டது
1984 இல் வெண் தேமல் நோய்க்கு காரணம் கிருமிகள் இல்லை; வைட்டமின் மாத்திரைகளை இப்போது பரிந்துரைக்கின்றனர்.
இன்னும், அந்நோய்த்தாக்கத்தில் பெரிய மாறுதல்கள் இல்லை!
அடுத்த போஸ்டில் “கிருமிகள் கோட்பாடு” – கிருமிகளால் நோய்கள் ஏற்படுவது இல்லை..?
லூயிஸ் பாஸ்டர் தன் மரணப் படுக்கையில் இருந்த போது “உடல் தான் எல்லாமே; கிருமிகள் ஒன்றுமில்லை” (Tissue is everything; Germ is nothing) – என்று தன் ஆய்வுகளுக்கு எதிரான கருத்தைத் தானே வெளியிட்டார். மற்றும் பல சான்றோர்களின் சாட்சியங்களுடன்...

0 comments:
Post a Comment