கோவை அன்னூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட
குழந்தை உயிரிழந்த நிலையில், செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை
உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோவை மாவட்டம்,
அன்னூரைஅடுத்த பொகலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் – அய்யம்மாள்
தம்பதியினர். இவர்களது 45 நாள் ஆண் குழந்தையை தடுப்பூசி போடுவதற்காக அந்த
கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதனன்று அழைத்து
சென்றுள்ளனர். அங்குள்ள செவிலியர்கள் குழந்தைக்கு ஊசி போட்டுள்ளனர்.
இந்நிலையில், வீட்டிற்கு சென்ற பின்னர்குழந்தை உடல் நிலையில் பாதிப்பு
ஏற்படவே, மீண்டும் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு
முதலுதவி அளிக்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
ஆனால், கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்தபோது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்து விட்டதாகவும், புதிதாக வந்துள்ள மருந்து எனகூறி குழந்தைக்கு செவிலியர்கள் அந்தமருந்தினை செலுத்தியதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்ற பின்னரும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் செவிலியர்கள் அலட்சியம் காட்டியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 comments:
Post a Comment