நாப்கின் பயன்படுத்துவதால் கேன்சர் ஆபத்து!

நாப்கின் பயன்படுத்துவதால் கேன்சர் ஆபத்து! Usage of Sanitary Napkins leads to Cancer:
பெண்களின் மாதவிடாய் காலத்தின்போது அவர்கள் முற்காலங்களில் பருத்தி துணி, சாம்பல், மண் போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர். அப்போது எல்லாம் அவர்களுக்கு அவ்வளவாக நோய்கள் இல்லை,

 

ஆனால் இப்போது பெண்கள் பயன்படுத்தும் Mensuration Pads எனப்படும் நாப்கின்களில் சேர்க்கபடும் மூலப்பொருட்களில் பார்க்கும்போது அதில் Styrene, dioxin, Chloro-methane, Chloro-ethene, polyethylene, polypropylene, propylene glycol என பல உடலுக்கு விஷத்தன்மை தரக்கூடிய ரசாயனங்கள், செயற்கை நிறமூட்டிகள், வாடை வெளிவராமல் மட்டுபடுத்தும் வேதிபொருட்கள் சேர்க்கபடுகின்றன. இவை உடலில் வறட்சி தன்மை, ஹார்மோன் சுரப்புகளில் பிரச்சனை, கற்பப்பை மற்றும் பிறப்பு உறுப்பில் புற்றுநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், குழந்தையின்மை, பிறக்கும் குழந்தையின் ஊனம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
உடல் மேல் படுவதால் எப்படி நோய்கள் உருவாகும்?
நம் வயிற்றுக்குள் உணவின் வழியாக செல்லும் ரசாயனம் கூட உமிழ்நீர், மற்ற பிற சுரப்பு நீர்கள் கலப்பதால் அதன் வீரியம் இழந்து விடுகிறது. மேலும் கல்லீரல் அதன் நச்சுகளை பிரித்து அழித்து விடுகிறது, கழிவை அதனதன் கழிவுறுப்புகள் வெளியேற்றி விடுகின்றன. ஆனால் நம் உடலின் மேல் தோலில் சுரப்புகள் குறைவு. அதில் படும் ரசாயனம் நேரடியாக நம் தோலின் செல்களை தாக்குகிறது. அந்த செல்கள் கெட்டு, அதில் இருந்து ரத்தத்தின் வழியாக பிற செல்களையும், பின்பு சமந்தப்பட்ட உறுப்புகளை நோய்க்கு உள்ளாக்குகிறது. இவ்வாறே நோய் பரவுகிறது.
உடலின் மேல்தோலை பொறுத்தவரை அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தன்மையில் ஆனது. பாதங்களிலும் கால், கை மூட்டுகளிலும் இருக்கும் தோல் கடினமானதாகவும், முகத்தில் இருக்கும் தோல் மேன்மையானதாகவும் இருக்கும். அதிலும் பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. அங்கே இவ்வளவு வீரியம் வாய்ந்த ரசாயனங்கள் தொடர்ந்து நாப்கின்களால் ஒட்டிக்கொண்டு இருத்தல் மிகவும் ஆபத்தானது.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கழிவுகள் அதிகம் வெளியேறுவதால் அவர்களுக்கு சோர்வு ஏற்படும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஓய்வு அவசியம். அந்த 3 நாட்கள் ஓய்வு எடுக்கும் பெண்கள் அதன் பிறகு அதிக புத்துணர்வுடன் தங்கள் செயல்களில் ஈடுபட முடியும். ஆனால், இன்று பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்கிறார்கள். குறிப்பாக அதில் வேலை செய்யும் பெண்கள், மாதவிடாய் காரணமாக ஓய்வு விடுப்பு எடுத்தால் அவர்களின் உற்பத்தி குறையும். இதன் காரணமாக தான், அவர்களை “அந்த எண்ணத்தை மாத்துங்க’... என கூறி குதிக்கலாம், தாவலாம், என்று பல நிறுவனங்கள் நாப்கின் வியாபாரத்தை செய்கின்றன. இதனை குறைவான விலை என்றும் கூறி விற்பனை செய்கிறார்கள். இதை பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படும் என்பதை அறிந்தே தான் இந்த விற்பனை நடக்கிறது. நோய்களால் மக்கள் ஆங்கில மருத்துவத்தை தான் நாடுவார்கள். எனவே அவர்களுக்கு வருமானம். நாப்கின் கம்பனிகளுக்கு ஆங்கில மருந்து கம்பனிகளின் பெருந்துணை இருக்கிறது.
எனவே பெண்களே, தயவுசெய்து நாப்கின்களை பயன்படுத்தாதீர்கள்.
மாற்று என்ன?
பருத்தி துணியை மடித்து வைத்து பயன்படுத்தலாம், அதை 3 (அ) 4 முறைகள் கூட துவைத்து பயன்படுத்தலாம். மறுபடியும் பயன்படுத்த விருப்பமில்லை என்றால் ஒரு முறை பயன்படுத்திய பிறகே கூட நீக்கி விடலாம். இன்று நாப்கின்களை தவிர்த்து இயற்கை வழியில் வாழும் பெண்கள் பலர் பருத்தி துணியை தான் பயன்படுத்துகிறார்கள். இல்லையென்றால் பருத்தி துணியை கொண்டு நீங்களே வீட்டில் நாப்கின்களை தைத்து கொள்ளுங்கள். துணி தைக்கும் பெண்கள் இதனையும் தைத்து தரலாம்.

Thanks
Healer Giridharan (click Here)

0 comments:

Post a Comment