பிரபல சர்க்கரை நோய்க்கு புதிய பிரச்சினையாம்.

பிரபல சர்க்கரை நோய்க்கு புதிய பிரச்சினையாம்.
மரு. கோ. பிரேமா BHMS,
போன வருசம் இப்படிதான் இரத்த கொழுப்பு அளவுக்கு ஒரு பிரச்சினை வந்ததே. அதே மாதிரி இப்போ சர்க்கரை அளவிற்காம்.
பாவம்.
அமேரிக்க மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கு மருத்துவம் செய்வதில் புதிய கோட்பாடுகளை பரிந்துரைத்துள்ளது.
இதுநாள் வரை இருந்த அதிக பட்ச இரத்த சர்க்கரை அளவை தளர்த்தி உள்ளது.
அதாவது இதுநாள் வரையில் தீவிர நோயாளிகளாக அறியப்பட்டவர்கள் இப்போது அவ்வளவு தீவிர நோயாளி இல்லையாம்.
ஒவ்வொரு நோயாளியின் வயது நோய் தன்மை பொருத்து மருந்துகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் எடுக்க சொல்லியிருக்கிறார்கள். (தனித்தன்மைக்கு கொஞ்சம் கொஞ்சமா வராங்க, ஆச்சரியமா இருக்கு! நிஜமாவா , நீங்களா ?!?!)
சர்க்கரை அளவு கட்டுப்பாடு நிதானமான எல்லைக்குள் இருப்பவர்களுக்கு மருந்துகளை குறைக்க வலியுறுத்துகிறார்கள்.
தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ பரிந்துரை, நன்மையை விட தீங்கு நிறைந்ததாக இருக்கிறதாம்.
ஆனா பாருங்க நம்ம இந்திய மருத்துவர்கள் இந்த புதிய பரிந்துரைகளினால் இப்போ செம கடுப்பாயிட்டாங்க..
கடந்த 30 வருடமாக நாங்க கடைபிடித்து வரும் சர்க்கரை அளவு மற்றும் மருத்துவ பரிந்துரை பயன் அளித்து வருகிறது. இப்போ மருந்துகளை குறைத்துவிட்டால் பலர் நோயின் தீவிரத்தில் போய் விடுவார்களேனு ரொம்ப கொந்தளிச்சு வருத்தப்படுறாங்க.
😂😂😂😂😂😂
நீங்க எதுக்கு வருத்தப்படுறீங்கனு எங்களுக்கு தெரியாதா..
சரி சரி..
இப்போ இந்த இரத்த சர்க்கரை அளவில சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க...
நான் வேற பரீட்சையில் இந்த நம்பர் லாம் எழுதனுமாம்.
சத்திய சோதனை.. 🤦🤦
(உலக அளவிலான பரிந்துரை என்றாலும், இந்திய மருத்துவர்கள் இந்த பரிந்துரையை நிராகரித்து விட்டார்களாம். பழையது தான் அவங்களுக்கு பிடிச்சிருக்காம்.
அதனால் இங்கே எந்த மாற்றமும் இல்லை.)
குறிப்பு:
இந்த செய்தி வந்துள்ள பக்கத்தை பார்த்தீங்களா?
" Politics and policy " = "அரசியல் மற்றும் கொள்கை" !!
😜😂🤣
மிகச்சரியா கோர்த்திருக்காங்க இந்த செய்திதாளில். பெயர் தெரியவில்லை.
4 நாட்களா பல இடங்களில் இந்த படம் சுத்திக்கிட்டு இருந்தது.
இவங்களுக்கு வேற வேலை இல்லை. அளவை ஏத்திறதும் குறைக்குறதும் இதே பொழப்புனு இதை முதலில் பெரிதாக எடுக்கவில்லை.
ஆனாலும் நிறைய பேருக்கு தகவல் தெரியலனு தெரிஞ்சது.
அதான் ஏதோ நம்மால முடிஞ்சது..


0 comments:

Post a Comment