Feb 08, 2019

தாராபுரம் அருகே தடுப்பூசி போடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார், விஜயலட்சுமி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையின் உடல் நிலை திடீரென மோசமடைந்ததால் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment