தடுப்பூசி தற்கொலைக்கு சமம் ...!

தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பும் பலநோய்கள் தானாக தோன்றி எவ்வித மருந்துகளுமின்றி தானாக குறைந்திருக்கிறது. இப்படி இயற்கையாகக் குறைந்த பலநோய்களை தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றியது தடுப்பூசி தயாரிக்கும் கம்பெனிகள். 1800 களி லிருந்து நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். 20 ஆம் நூற்றாண்டின் முதல் 60 ஆண்டுகளுக்குள் தட்டம்மை நோய் பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் 97.7% குறைந்து விட்டன. அமெரிக்காவில் 1900 இல் ஒரு மில்லியனில் 133 பேர் இறப்பு என்பது குழந்தை பொது மரண விகிதம். இவர்களில் 100 பேர் தட்டம்மை யால் இறந்தவர்கள். 1960 இல் மரண விகிதம் 0.3% ஆகக் குறைந்து விட்டது. ஆனால் 1963 இல் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தட்டம்மை தடுப்பூசியால் மரண விகிதம் குறைந்துவிட்டதாக இப்போது கூறிக்கொள்கிறார்கள்.
இந்தத் தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால்கூட பரவா யில்லை; ஆனால் புதிய, கொடூரமான நோய்களையும் நம் குழந்தை களுக்கு பரிசாகத் தருகின்றன. 2004 ஆம் ஆண்டில் வெளியான டென்மார்க் நாட்டு அறிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டும் 4,40,000 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இவ்வாறு தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்கக் குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர் தான். 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்கக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் 150:1. 3000 மடங்கு அதிகரிப்பு ! ( அமெரிக்கத் தடுப்பூசித் திட்டங்களைப் பின் தொடர்ந்து தான் இந்தியா செல்கிறது என்பதை தனியே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது).
DPT தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படுகிறது. (இந்த தடுப்பூசி மருந்தையே நம் டாக்டர் கண்ணில் காட்டமாட்டார். சிரிஞ்சில் ஏற்றப்பட்ட பிறகே நாம் அதைப் பார்க்க முடியும்.இந்த நிலையில் அறிக்கையாவது மண்ணாவது ). DPT தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சில பின்விளைவுகள் ஏற்படலாம் என்று குறிப்பிடும் இந்த எச்சரிக்கை அறிக்கையை கொஞ்சம் வாசியுங்களேன்.
1.அதிகப்படியான காய்ச்சல் ( 105 டிகிரி அல்லது அதற்கு மேல் )
2.மந்தமாக இருத்தல்
3.நீடித்த அசதி
4.விட்டு விட்டு ஏற்படும் அலறல்
5.மூளை வளர்ச்சிக் குறைபாடு
6.அதிகப்படியான துறுதுறுப்பு
7.எப்பொழுதாவது வலிப்பு
8.மூளை பாதிப்பு
9.மயக்கம்
10.கண் நரம்புக் கோளாறுகள்
11.நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு. . .
இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாக குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDS தான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome அதாவது குழந்தை திடீரென இறந்துபோகும் என்பதைத்தான் இவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க் என்று வெளிநாடுகளில் தானே இப்படி யான மரணங்கள் பதிவாகியுள்ளன. நாம் பயன்படுத்துவது வேறு மருந்தாக இருக்கும் என்று நினைத்துவிட வேண் டாம். இந்தியாவிலும் இத்தகைய பாதிப்பு கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின் றன. நம்முடைய பதிவேடுகளும், குறிப்பு களும் முறைப்படி எழுதப்படாமல் இருந் தாலும்கூட அரசும், மருத்துவத்துறையும் உணர்ந்துதான் இருக்கின்றன.
இந்த கட்டுரையின் தொடர்ச்சி http://rkacu.blogspot.in/2012/03/blog-post_8479.html என்ற ப்ளாக் இல் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment