சகோதரிகளே/தோழர்களே,
இதற்கு முந்தைய நம்முடைய கர்ப்பப்பை பற்றிய அனுபவக் கட்டுரை இவ்வளவு வரவேற்பை பெரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் இதுவரைக்கும் நாம் பல உடலியல் சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் பதிவிட்டுள்ளோம். ஆனால், அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை விட அனுபவக் கட்டுரைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதைத்தான் அன்பு தோழர்.அக்குஹீலர்.அருண்குமா ர் என்னிடம் கூறினார். அதன் பின்பே அனுபவ கட்டுரைகளை
பதிவிட தொடங்கினேன். சரி இனி வரும் அனுபவ கட்டுரைகளில் தத்துவத்தை (உடல்
ஒருபோதும் தவறு செய்வதில்லை) எவ்வாறு ஒவ்வொரு நோய் நிலையிலும் பொருத்தி
புரிந்துகொள்வது என்பதை பார்கலாம்.
சுமார் ஒரு வருடம் முன் 17 வயதே நிரம்பிய பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அவர் கூறியது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி அவர் என்ன கூறினார்..!
தனக்கு முதல் பருவம் அடைந்த நாள் முதல் சீராக மாதப்போக்கு இல்லை என்றும், அதனை பார்க்க மருத்துவர்களை சந்தித்தபோது அதற்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்தார்கள். அதனை சாப்பிட்டால் மாதப்போக்கு இருந்தது. இப்படியாக சுமார் இரண்டு வருடங்கள் ஆனது. பின்பு டாக்டரிடம் எனக்கு ஏன் மருந்துகள் எடுக்காமல் மாதப்போக்கு ஏற்படுவதில்லை என்று கேட்ட போது, அதற்கு கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றார்கள். நாங்களும் பார்த்தோம், அதில் ஓவரியில் கட்டிகள் உள்ளன அதனால் தான் சரியாக மாதப்போக்கு இல்லை என்றார்கள்.
நான் : சரி அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொன்னார்கள்..?
அந்த பெண் : அதற்கு மருந்துகளை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது, எனவே அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கினால் சரியாகிவிடும் என்றார்கள். நாங்களும் ஆபரேஷன் செய்தோம், மாதப்போக்கும் மருந்துகள் இல்லாமல் சீராக இருந்தது. நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம்.
நான் : அப்புறம் என்ன..
அந்த பெண் : ஆனால், அந்த மகிழ்ச்சி சில மாதங்கள் மட்டுமே இருந்தது. பின்பு பழையபடி பிரச்சனை தொடர்ந்தது. இப்போதும் மருந்துகளை சில மாதங்கள் சாப்பிடுங்கள், தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள்..! இரண்டு, மூன்று மாதங்களுக்கு மருந்துகள் சாப்பிட்டும் மாதப்போக்கு சீராக இல்லை. எனவே மீண்டும் ஸ்கேன் செய்தோம். இப்போது டாக்டர் சொன்னார் மீண்டும் ஓவரியில் கட்டிகள் வந்துள்ளது அதனை ஆபரேஷன் செய்து நீக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று. மீண்டும் ஆபரேஷன் நடந்தது...!
நான் : அதன் பின்பாவது தொந்தரவு குறைந்ததா..?
அந்த பெண் : ஆம், சில மாதங்களுக்கு மட்டுமே..! மீண்டும் தொந்தரவு வரவே நாங்கள் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு சென்றோம். அங்கும் ஆபரேஷன் தவிர வேறு வழி இல்லை என்று மீண்டும் மூன்றாவது முறை ஆபரேஷன் செய்யப்பட்டது.
நான் : அப்புறம்
அந்த பெண் : இப்படியாக கடந்த மூன்று வருடங்களில் குறைந்தது எட்டுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை மாறிவிட்டோம். இடையில் மேலும் ஒரு ஆபரேஷனும் செய்யப்பட்டது. இதுவரைக்கும் மொத்தம் நான்கு முறை ஆபரேஷன் செய்துளோம்.
நான் : ஆமாம், இத்தனை முறை ஆபரேஷன் செய்து உள்ளீர்கள். இப்படியே ஆபரேஷன் செய்துகொண்டே இருந்தால் இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்று யாராவது ஒருவரிடமாவது கேட்டீர்களா..?
அந்த பெண் : கடைசியாக பார்த்த “பெண்கள் நல” சிறப்பு மருத்துவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 100 முறை வரைக்கும் ஆபரேஷன் செய்யலாம், இது ஒன்றும் புதிது இல்லை. இன்றைய பெண்கள் பலருக்கும் இப்படி பிரச்சனை உள்ளது, அவர்களுக்கும் ஆபரேஷன் தான் செய்கிறோம். என்னிடமே இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாயே என்று என்னிடம் கடினமாக சொன்னார். (ஏன்யா உங்களுக்கு வெட்டறது, ஒட்டறது, இதைவிட்டா வேற எதுவுமே தெரியாதா..!, ஒரு கல்யாணம் செய்யப்போற பொண்ணுக்கு இத்தனை இடத்துல கத்தி வைத்தால், அவருடைய எதிர்கால குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். இதை எல்லாம் யோசிக்கவே மாட்டிங்களா..?)
நான் : சரி, எனக்கு ஏன் கர்ப்பப்பையில் கட்டி வந்தது, அதனை மறுபடியும் வராமல் செய்ய முடியாதா..? என்று கேட்டீர்களா..?
அந்த பெண்ணை அழைத்து வந்தவர் : நீங்க சொல்வது போல டாக்டர்களை கேள்விகள் எல்லாம் கேட்க முடியாது. மீறி கேட்டா, நீ டாக்டரா.. இல்ல நானா..! என்று கேட்ப்பார்கள். (பாவம் இந்த மக்கள், உண்மையில் நோய்க்கு காரணமே இவர்களின் “அறியாமைதான்”. இதனை மாற்ற நம்மால் முடிந்த காரியங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் – இந்த எண்ணத்தின் விளைவே நீங்கள் படிக்கும் இந்த கட்டுரைகள் அனைத்தும்.)
நான் : சரி அதை விடுங்கள். எனக்கு 100 முறை ஆபரேஷன் செய்யலாம் என்று சொல்கிறீர்கள். அதற்கு பின்னால் என்ன செய்வது என்று டாக்டரிடம் கேட்டீர்களா..?
அந்த பெண் : அதற்குப் பின்னால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்றார்கள்..! (என்னால் அடுத்த கேள்வி கேட்க முடியவில்லை)
நான் : சரி உங்களுக்கு இது போக என்ன தொந்தரவுகள் எல்லாம் உள்ளது..?
அந்த பெண் : உடல் மிகவும் அசதியாக உள்ளது, எந்த வேலையும் செய்யவே தோன்றவில்லை. தூக்கம் இரவு 1 - 2 மணிக்கு பின்பே வரும். காலை 9 – 10 மணிக்கு முன்னால் விழிக்க முடியாது. தூங்கி எழுந்த பின்பும் மிகவும் அசதியாக இருக்கும், அடிக்கடி தலைவலி வரும், அது அதிகம் ஆகும் போது வாந்தியும் வரும். வாந்தி வந்தால் சற்று தலைவலி குறையும், மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி, இடுப்பு வலி அதிகமாக இருக்கும்...
நான் : சரி, இந்த பிரச்சனைகளுக்கு தற்போது என்ன செய்து வருகிறீர்கள்..?
அந்த பெண் : இன்று வரைக்கும், மாதவிலக்கு ஏற்பட ஹார்மோன் மாத்திரைகள், தலைவலிக்கு - வலி மாத்திரை, வாந்தி வரும்போது அதற்கு மாத்திரை, தூக்கம் வர மாத்திரை சாப்பிடுவேன். மாத்திரைகள் சாப்பிடத் தொடங்கிய சில நாட்களில் வயிற்றில் எரிச்சல் வந்ததால், அதற்கு "Gelusil"ம் குடித்து வருகிறேன்.
நான் : சரி, பசியை உணர முடிகிறதா..?
அந்த பெண் : பசிக்கிறதோ, இல்லையோ மாத்திரை சாப்பிடவாவது நான் பசிக்காமல் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்..!
நான் : சரி, இன்றுமுதல் அனைத்து மருந்துகளையும், மாத்திரைகளையும் நிறுத்தி விடுங்கள். அப்படி என்றால் மட்டுமே நாங்கள் சிகிச்சை செய்வோம்.
அந்த பெண் : ஏற்கனவே சொன்னார்கள், நிச்சயம் சாப்பிட மாட்டேன்.
நான் : உடலின் அடிப்படை தேவைகளை கவனித்து நடக்கவேண்டும், அப்போதுதான் உடலால் தன்னை சுயமாக குணப்படுதிக்கொள்ள முடியும். இந்த உடலின் மொழி புத்தகம் படியுங்கள்.
அதற்குப் பின்பு அந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்கள் சிகிச்சை தொடர்ந்தது. அவருக்கு இருந்த தொந்தரவுகளான கர்ப்பப்பை பிரச்சனை, தூக்கமின்மை, பசியின்மை, வாந்தி, அதிக சோர்வு, தலைவலி, ஆகிய பிரச்சனைகள் ஒவ்வொன்றாக அதிகம் ஆவது, குறைவது என்று மாறி மாறி வந்தது. காய்ச்சலும் அதனுடன் கூடிய சளியும் இரண்டு முறை தொடர்ந்து 4 – 5 நாட்கள் வரைக்கும் இருந்தது. இப்போது, அவர் காய்ச்சலுக்கும் சளிக்கும் கூட மருந்துகளை தொடவே இல்லை.. ஏன்..? ஏன் என்றால் அவைதான் அடிப்படை நோயை நீக்க வந்த அறிகுறிகள். (காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் மற்றும் உடலின் தேவைகளைப் பற்றி மேலும் அறிய கட்டுரையின் கடைசியில் உள்ள லிங்கில் சென்று “நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்”, ”உங்களுக்குள் ஒரு மருத்துவர்”, “உடலின் மொழி” புத்தகங்களை படியுங்கள்). அவருக்கு சிகிச்சை முடிந்து சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும். இடையில் கடந்த வாரம் பார்த்தபோது (வேறு ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார்) சற்று கால் மூட்டு வலி மட்டுமே உள்ளதாகவும், மற்ற அனைத்து பிரச்சனைகளும் முழுவதும் சுகம் பெற்றதாகவும் கூறினார். நான், சிகிச்சை அவசியம் இல்லை உடலின் தேவைகளை கவனியுங்கள் விரைவில் சரியாகும் என்று கூறி அனுப்பினேன்.
இதற்கு இடையில் தன்னுடைய அப்பாவின் விருப்பத்திற்காக ஸ்கேன் செய்து எந்த கட்டிகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், எனக்கு அதை பற்றி கவலை இல்லை எனவே நான் ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டு வரவும் இல்லை, நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்றும் எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியது, அவருடைய உடலியல் பற்றிய புரிதலை எனக்கு உணர்த்தியது.
மேலும். இந்த தொந்தரவுகளால், இடையில் கைவிட்ட படிப்பை (+2) பிரைவேட் எக்ஸாம் மூலம் கடந்த கல்வியாண்டில் முடித்து விட்டேன். அடுத்த நான் என்ன படிக்கலாம் என்றும் ஆலோசனை கேட்டார். நீங்கள் விருப்பப்பட்டால் “இந்திய அக்குபங்சர்” படிக்கலாமே என்றேன். இந்த ஆண்டுக்கான அட்மிசன் முடிந்த காரணத்தால், அடுத்த வருடம் அக்குபங்சர் படித்து தன்னை போன்று இன்னல்படும் நபர்களுக்கு ஆரோக்யதை நோக்கிய பாதையை காட்ட விரும்புகிறார். இயற்கையின் பாதைக்கு அவரையும் வரவேற்போம்..
கட்டுரையை படிக்கும் உங்களில் பலருக்கும், இந்த இடத்தில் மிகப்பெரிய கேள்வி ஒன்று தோன்றும். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் “உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..! மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!” என்று போடுகிறீர்கள். இந்த பிரச்சனைகள் அனைத்துமே நோய்கள் தானே இங்கு உடல் தவறு ஏதும் செய்யவில்லை என்று சொல்லப் போகிறீர்களா..? மேலும், எப்படி முழுமையாக குணமாகிறது..?
ஆம், உங்கள் கேள்விகள் சரிதான்.. இங்கும் உடல் தவறு எதுவும் செய்யவில்லை என்று நான் உறுதியாக சொல்வேன்..! எப்படி..!
# நோய்க்கு (கட்டி உருவாக) மூல காரணம் என்ன..?
# ஏன் அவருக்கு இந்த பிரச்சனை வந்தது..? (நோய்க்கான காரணம் தெரியாமல் அதனை குணப்படுத்த முடியாது அல்லவா..!)
# கர்ப்பப்பையின் அடிப்படை இயக்கம் என்ன..?
# ஏன் சீராக மாதவிலக்கு ஏற்படுவது இல்லை..?
# மருந்துகள் சாப்பிட்டும் ஏன் அந்த நோய்கள்(அவை நோய்களே இல்லை, வெறும் அறிகுறிகள் மட்டுமே) எதுவும் நிரந்தரமாக குணமாகவில்லை..?
# ஹார்மோன் மாத்திரைகள் - குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடிக்கும்.
# ஏன் எனக்கு குழந்தைப்பேறு இல்லை (கருத்தரிப்பு ஏற்படவில்லை)..?
இப்படி பல கேள்விகள் அடுத்தடுத்து வரும் அல்லவா..! எனவே இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனியாக கட்டுரை போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
(அன்பு சகோதரிகளே, இவை போக உங்களுக்கு எதாவது கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். பின்வரும் கட்டுரையில் அதற்கும் பதில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.)
எனவே, அடுத்த கட்டுரையில் தொடருவோம்.... [கர்ப்பப்பையில் இருந்த ஒரு கிலோ கட்டி எப்படி கரைந்தது..?]
https://www.facebook.com/ rkacu/notes மற்றும்
http://rkacu.blogspot.in/ p/ free-e-books-download.html உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை
இதற்கு முந்தைய நம்முடைய கர்ப்பப்பை பற்றிய அனுபவக் கட்டுரை இவ்வளவு வரவேற்பை பெரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் இதுவரைக்கும் நாம் பல உடலியல் சார்ந்த கட்டுரைகளையும், புத்தகங்களையும் பதிவிட்டுள்ளோம். ஆனால், அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை விட அனுபவக் கட்டுரைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதைத்தான் அன்பு தோழர்.அக்குஹீலர்.அருண்குமா

https://www.facebook.com/
http://rkacu.blogspot.in/

0 comments:
Post a Comment