சென்னை: தடுப்பூசி போட்டதால் குழந்தை மரணம்?

சென்னை: ஓட்டேரி மாநகராட்சி நலவாழ்வு மையத்தில், தடுப்பூசி போட்ட மூன்று மாதக் குழந்தை பரிதாபமாக இறந்தது.ஓட்டேரி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமாராவ். இவரது மூன்று மாத மகள் தனுஜாஸ்ரீ. குழந்தைக்கு நேற்று காலை ஒட்டேரி குக்ஸ் சாலையில் உள்ள, வாடிமா நகர் நலவாழ்வு மையத்தில், தடுப்பூசி போடப்பட்டது. இக்குழந்தையுடன் சேர்த்து, 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். பின் வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்தில், குழந்தை தனுஜாஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாகத் தடுப்பூசி போட்ட, அதே மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. பின் அங்கிருந்து எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் போகும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து, ஒட்டேரி போலீசார் கூறுகையில், ""இறந்து போன குழந்தையுடன், 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். இக்குழந்தை மட்டும் இறந்துள்ளது. குழந்தைக்கு வேறு நோய் ஏதேனும் இருந்ததா என, விசாரித்து வருகிறோம்' என்றனர்.

0 comments:

Post a Comment