கோவை:
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை புதன்கிழமை
மாலை உயிரிழந்தது.செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக
உறவினர்கள; குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த பொகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், அய்யம்மாள் தம்பதியினர்.
இவர்களது ஆண் குழந்தைக்கு பொகலூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் புதன்கிழமை அங்குள்ள செவிலியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
வீட்டிற்குச் சென்ற பின்னர் குழந்தை உடல் நிலையில் பாதிப்பு ஏற்படவே மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு
சென்ற பின்னரும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் செவிலியர்கள் அலட்சியமாக
இருந்ததாக குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும்
குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அலட்சியமாகப் போக்குடன் செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



0 comments:
Post a Comment