புதுக்கோட்டை அருகே தடுப்பூசி போட்ட ஒன்றரை வயது குழந்தை பலி


  புதுக்கோட்டை அருகே தடுப்பூசி போட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புளியஞ்சோலை வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது, இவரது மனைவி சமீனாபானு. இவரது மகன் சமீர் (ஒன்றரை வயது) குழந்தைக்கு நேற்று காலை அங்கன்வாடி செவியலியர்கள் 3 தடுப்பூசி போட்டனர். பின்னர் காய்ச்சல் அடித்தால் குழந்தைக்கு மாத்திரை கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
 புதுக்கோட்டை அருகே தடுப்பூசி போட்ட ஒன்றரை வயது குழந்தை பலி (படம்)
 இந்நிலையில் இன்று காலை குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் உடனடியாக கறம்பக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து சமீரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு ஊசி போட்டனர். ஊசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுதனர்.
பின்னர் இறப்பு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ஆரோக்கியமாக இருந்த என் குழந்தை தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சல் வந்து இறந்துவிட்டது. அதனால் தடுப்பு ஊசி மருந்து கெட்டுப்போனதா அல்லது தடுப்பு ஊசி போட்டது தவறா என்பது தெரியவில்லை. எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் எழுதி இருந்தார். தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்து போனதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-இரா.பகத்சிங்.


0 comments:

Post a Comment