ஆண்டிப்பட்டி அருகே தடுப்பூசி போட்ட கைக்குழந்தை பலி

தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகில் உள்ள காமன்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது27) கூலித்தொழிலாளி. இவருக்கு தேசிகா என்ற 3 மாத கைக்குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதன்மறுநாள் குழந்தைக்கு பயங்கரமான காய்ச்சல் அடித்தது. கடமலைக் குண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து பிரபு மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment