திருப்பெரும்புதூர்: போலியோ சொட்டு மருந்து ‌குடித்த குழந்தை பலி

 திருப்பெரும்புதூர் அருகே படப்பையில் போலியோ சொட்டு மருந்து குடித்த 2 வயது குழந்தை பலியானது. அங்குள்ள சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கு ‌சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சொட்டு மருந்தை குடித்த அருள் என்பவரின் மகன் ஜோஸ்வா (2) பலியானான். சொட்டு மருந்தை குடித்த குழந்தை பலியான தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்த சம்பத்தப்பட்ட சமுதாய கூடத்தில் சொட்டு மருந்து கொடுப்பது உடனடியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 

0 comments:

Post a Comment