சுகபிரசவம்



இயற்கை வாழ்வியலை பற்றி எந்த புரிதல் இல்லாத வயதில் நான் பார்த்த எங்கள் தாத்தா S.T.ஆதித்தனார் இயற்கை உணவு, வாழ்வியலை கடைபிடித்து வாழ்ந்து 60வயதில் இருந்த சர்க்கரை, இரத்த கொதிப்பு என்ற நிலை மாறி 94 வயதிலும் பற்கள் ஒன்று கூட கொட்டாமல் இருந்த நிலையில் இயற்கை எய்தினார். இப்பழக்கம் எங்கள் தந்தை Balasubramania Adityan T மூலமாக செவிகளில் ஏறினாலும் மனதில் பதியாமல் இயற்கைக்கு மாறாக வாழ்ந்தும் தடுப்பூசியின் பிடியிலும் பல இன்னல்களை சந்தித்தோம். அலோபதி மருத்துவத்தை மறுக்கமுடியாமல் அனுபவித்து வந்தநிலையில் எங்களுக்கு அக்குபஞ்சர் மூலம் மிகப்பெரிய தீர்வு கிடைத்தது.
அதை நம் வீட்டளவில் பயன்படுத்துவோம் என ஆர்வத்துடன் அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவம் கற்றுகொண்டேன். அதன் விளைவே
'நலம்-மருந்தில்லா மருத்துவம்'
அன்று முதல் அக்குபஞ்சர் மற்றும் இயற்கை முறையில் பலருடைய கஷ்டங்களை போக்குவதற்கு துணையாய் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

என் அக்கா Gayathri B தன் குழந்தைக்கு தடுப்பூசி அலோபதி எதுவும் வேண்டாம் என முடிவு செய்த்தும் பல வகையில் அதனை ஆராய்ச்சி செய்து கற்று கொண்டோம். அன்று முதல் குழந்தைகளுக்கு எல்லாம் இயற்கை வைத்தியம் தான். வீட்டில் வெள்ளை சீனி,மைதா,பாக்கட் பால்,பதப்படுத்தபட்ட உணவு இவற்றை தவிர்த்து வாழ ஆரம்பித்தோம்.
இந்த தேடுதலின் விளைவாக அக்கா Gowri Gauri யின் முயற்சியே 'உரல்-கலப்பில்லா பாரம்பரியம்'.
இப்படி வாழ்ந்தாலும் பிரசவத்திற்கு அலோபதி மருத்துவமணையை நாட வேண்டிய நிலையை மாற்ற நினைத்தோம்.
பிரசவத்தை சுகபிரசவம் என்ற பெயரில் செய்தாலும் Episiotomy என சொல்ல கூடிய பிறப்புறுப்பின் வாயை வெட்டுவது முதல் எதையும் குழந்தைக்கு தொப்புள் கொடி உடனடியாக வெட்டுவது வரை எதையும் தடுக்க முடிவதில்லை. என் தங்கை Sundari Varun னின் தன்னம்பிக்கை, தைரியம் எங்களின் இந்த இயற்கை முறை பிரசவத்தை பற்றி அறிய தூண்டியது.
பல விடைகளை தேடி திரிந்த எங்கள் பக்குவமில்லா கேள்விகளுக்கு விடையாய் எங்கள் அண்ணா Chellam Selvaவின் பதில்கள் எங்களை உறு ஏற்றியது.
பசித்தால் மட்டுமே புசி, தாகம் எடுத்தால் நீர், இயற்கை உணவு, நாட்டு காய்கறிகள், பருவத்திற்கு ஏற்ற பழங்கள் என இயற்கையுடனே தன் இரண்டாம் கருவை சுமக்க துவங்கினாள்.
வீட்டில் பிரசவம் பார்பதற்கு கம்பம் அகாடமியில் பயின்றவர்களை தேடினோம். அக்கு ஹீலர் சண்முகப்பிரியா அவர்கள் மூலமாக அக்கு ஹீலர் மஹாலட்சுமி அவர்களை தொடர்பு கொண்டு அவர்களை சந்தித்ததும் எங்களுக்கு உள்ள பல கேள்விகளுக்கு தெளிவு பெற்று இயற்கை வழி பிரசவத்திற்கு தயாரானோம். எந்நேரமானாலும் வந்து பிரசவம் பார்பதற்கு தயார் என கூறினார்கள் இரவு 11-3 மணி வரை கண்டிப்பாக ஆழ்ந்த உறக்ககம் வேண்டும் என அறிவுறுத்தினார்.
பனிகுடம் உடைந்ததும் அக்கு ஹீலர் மஹாலட்சுமி, ஹீலர் Acu Devi Easwari ஹீலர் sharmila எல்லோரும் வந்துவிட்டனர். பதட்டம் இல்லாமல், ஆரவாரம் இன்றி அவளது கணவர், தாய் அவள் கைகளை ஆறுதலாய் பற்றி கொண்டும், எல்லோரும் இறைவன் மந்திரத்தை உச்சரித்து கொண்டும், அவளது மூத்த மகள் அம்மா பிரசிவிக்கும் முன் வரை அம்மாவை பார்த்து விட்டு அதே அறையில் உறங்கிபோனாள். இயற்கை முறை பிரசவம் என்பது பிரசவம் பண்னுவதல்லை பிரசவம் பார்பது என எங்களுக்கு வழிமுறையாய் உணர்த்தி தங்கையின் கை,கால்களை பிடித்து விட்டு ஆறுதலாய் இருந்தனர். எங்கள் அம்மா Rathi Adityanயின் வழியே குழந்தை பிறக்கும் போது எவ்வளவு வலி என்றாலும் கண்களில் நீர் சொரியுமே தவிர கத்தி கூச்சல் இல்லாமல் அதை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். தலையில் கொடி சுற்றியிருந்தும் பிறக்கும் வரை யாருடைய சுண்டு விரல் கூட படாமல் இயற்கையாய் ஆண் குழந்தையை பிரசவித்தாள்.
பிரசவித்தவுடன் 5 நிமிடத்தில் நச்சுபை என சொல்லகூடிய Palacenta முழுமையாக வெளிவந்தது.
பிரசித்தவுடன் கிராமத்து முறைபடி தாயின் வயிற்றில் சுடுதண்ணீர் அடித்து ஊற்றி கழிவுகளை வெளியேற்றி தாயை குளிப்பாட்டினர்.
இறைவழியில் இச்சேவையை செய்தவர்கள் யாரும் எங்களிடத்தில் பணத்தை பெற்று கொள்ள மறுத்து விட்டனர்...எங்கள் இளவரசனை பத்திரமாக எங்களிடம் சேர்த்த உங்களுக்கு என்றும் எங்கள் அன்பும் நன்றியும்.
இயற்கை வழி சுகபிரசவத்தின் சிறப்புகளாய்
தொப்புள் கொடி சுத்தமாக வெள்ளையாய் மாறும் வரை அதை வெட்டவில்லை,அதுவே குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி. குழந்தையின் தலையில் வெள்ளையாய் இருக்கும் படலத்தை உறிஞ்சும் வரை குளியல் இல்லை. பசித்து குழந்தை அழும் வரை பால் இல்லை. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கும் குழந்தைக்கும் முதல் தேவை நல் உறக்கம் மட்டுமே.குழந்தை பிறந்தவுடன் முதன்முதலில் கொடுப்பது மழைநீரும் தேனுமே.
குழந்தை பிறப்பது குடும்பத்தார் சூழ இயற்கையுடன் சுகமாய் பயணிப்பது என்பதால் தானோ இதற்கு 'சுகபிரசவம்' என பெயர் வைத்தனர்?
கீதா
'நலம் மருந்தில்லா மருத்துவம்'

நன்றி- Geetha Adityan


1 comment:

  1. நற்பணிகள் எங்களுக்கும் கிடைக்கட்டும்

    ReplyDelete