சென்னை: சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட 5
வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் காவிரி நகரை சேர்ந்த கோபி - லோகேஷ்வரி தம்பதியின் மகள்
தன்ஷிகா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவருக்கு கடந்த 1-ம் தேதி தடுப்பூசி
போடப்பட்டுள்ளது. ஆனால் ஊசி போட்ட நிலையில் மருத்துவமனையை கடப்பதற்குள் கண்
எரிச்சல் ஏற்படுவதாக தனது தாயாரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கான காரணம் கேட்டால் மருத்துவர்கள் அலட்சியமாக பதில் தருவதாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் தனது குழந்தையை வேறு ஒரு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் சென்னையில் பல்வேறு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மூலம் 8 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment