ஒடிசா பள்ளியில் தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட்ட மாணவன் மயங்கி விழுந்து இறப்பு

காலையில் பள்ளிக்கு அனுப்பி வைத்த குழந்தை, மாலையில் பிணமாக!
மரு. கோ. பிரேமா BHMS,


13/9/2019 அன்று ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளின் மூலம் தொண்டை அடைப்பான் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.



ரூர்கேலா எனும் இடத்தில் பள்ளிமாணவர்களுக்கு TD தடுப்பூசி 10வயது மற்றும் 16வயது குழந்தைகள், முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு போடுவதென திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இப்பள்ளியில் எந்த பெற்றோரிடமும் சம்மதம் வாங்கவில்லை. இன்று இப்படியொரு திட்டம் நடைபெறவிருப்பதே பெற்றோரிடம் சொல்லப்படவில்லை.
9 வயதே ஆன சுமன்ஜித் பிரதான் , தடுப்பூசி போட்டு சிலமணிநேரங்கள் கழித்து மயங்கி விழுந்து இறந்துவிட்டான்.
பெற்றோர் சம்மதம் பெறாமல் எப்படி இப்படியொரு பாதகமான மருத்துவக்குறுக்கீடை இவர்கள் நடத்துகிறார்கள்?
இதுல நம்மூரு அதிகாரி தடுப்பூசி கட்டாயம்னு கதை அளந்துவிட்டுருக்காரு RTIல. சட்டவிரோதமான இப்பதிலுக்கு ஞாயமாக அவர்மீது வழக்குகூட போடலாம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைப்பேறு என்பதே பலருக்கு எட்டாக்கணியாக இருந்துவருகிறது.
பெற்றாலும் ஒன்றோ இரண்டோ தான்.
இப்படி தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை , ஆரோக்கியமான குழந்தையை ஓர் அரசுத்திட்டம் , ஒரு மருத்துவக்குறுக்கீடு, பெற்றோர் சம்மதமில்லாமல்/அவர்களது மறுப்பைமீறி கொண்றுகுவிக்கத்தானா?
எத்தனை கோடி இழப்பீடு கொடுத்தாலும் இறந்த பிள்ளைக்கு ஈடாகுமா? அந்த இழப்பீடை கூட இதுவரை எந்த மாநில அரசும் தந்ததில்லையே?
PC and news sharing: Jagannath Chatterjee

0 comments:

Post a Comment