எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இன்றைய நவீன மருத்துவம் என்று சொல்லப்படும் ஆங்கில மருத்துவத்தில் அவர்கள் சொன்னது போல் எல்லாம் செய்தாலும் சிசேரியன் மட்டுமே நடக்கிறது. ஆங்கில மருத்துவர்களால் அறிவியல்பூர்வமற்றது என்று சொல்லப்படும் அக்குபஞ்சர் ஹீலர் வீடுகளிலும் அவர்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மட்டுமே இன்று சுகப்பிரசவங்கள் நடந்துவருகிறது,அதுவும் எந்த வித மருந்துகளும் மாத்திரைகளும் இன்றி. இந்த குழந்தையையும் வாழ்த்துவோம்.
Acu Healer Umar Farook அவர்கள் பக்கத்தில் இருந்து
இன்று மாலை 4 மணியளவில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொலைபேசியில் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்த போது “சிசேரியனா?” என்ற தேசியக் கேள்வியைக் கேட்கிறார்கள். வீட்டில் எங்கள் யாருக்கும் சிசேரியன் செய்யத் தெரியாது என்பதால் நார்மல் தான். அடுத்த கேள்வி “என்ன வெய்ட்?”. சமைப்பதற்காக கறி வாங்கும் போது மட்டும் தான் எடைபோடுகிற பழக்கம். வீட்டில் குழந்தைகளை எடை போடுகிற பழக்கமும் இல்லை. மருந்து நாற்றமின்றி, எதிர்பார்க்கும் உறவுகளின் முன்னிலையில் என் மகளின் வருகை இனிதே நிகழ்ந்துள்ளது...

0 comments:

Post a Comment