திருப்பூரில் எனது நெருங்கிய நண்பரும், அக்குஹீலருமான நண்பர் திரு.கோபால் மற்றும் அவர் மனைவி நிர்மலா. இவர்களது மகள் திருமதி.திலகவதி மற்றும் அவர் கணவர் திரு.முரளி. இதில் திலகவதியும் அக்குஹீலர் ஆவார்.
முரளி- திலகவதி தம்பதியர்க்கு கடந்த 11.08.14 அன்று காலை 8:00 மணிக்கு இயற்கையின் துணையுடன் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்து அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
கரு உருவான நாள் முதல் எந்த வித இரசாயண கழிவுகளும்(மருந்து மாத்திரைகள்) எடுக்காமல், எந்தவித கதிரியக்க பாதிப்புகள்(ஸ்கேன்) இல்லாமல் நடந்ச சுகமான பிரசவம்.
மெத்தப்படித்த மருத்துவர்கள் , சிசேரியன் செய்ய பயமுறுத்தும் காரணங்களால் டென்சன் இல்லாத பிரசவம்.
குழந்தை முழுவளர்ச்சி உள்ளது என்று கூறி சிசேரியன் செய்து பின் இன்குபேட்டரில் வைப்பதிலேயே நாம் புரிந்துகொள்ளலாம் அந்த குழந்தை இன்னும் முழு வளர்ச்சி பெறவில்லை என்று.
தற்போது அதிகரித்து வரும் ஆட்டிசம் எனும் மூளைவளர்ச்சி குறைபாடு, மற்றும் தசை அழுகல் நோய் ஆகியவைகளுக்கு காரணமான தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாததால் இது நிச்சயம் ஆரோக்கியமான குழந்தை.
குழந்தை வெளிவரும் போது குழந்தையின் பாட்டி திருமதி.நிர்மலா அவர்களால் முதன்முதலில் ஏந்தப்பட்ட குழந்தை என்பதால் இது ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை.
21.08.14 அன்று இந்த குழந்தைக்கு காவ்யா என்று பெயரிட்டுள்ளனர்.
மருத்துவ உபகரணங்கள் ஏதும் இன்றி, இயற்கையின் துணையுடன் பிறந்த காவ்யா நீடூழி வாழ வாழ்த்துவோம்.
அன்பிற்கினிய நண்பர் Acu Healer Mohanraj அவர்களின் Timelineல் இருந்து...
இந்த குழந்தை இயற்கையின் பேராற்றலுடன், அனைத்து நலன்களையும் பெற்று சீருடன் வாழ வாழ்த்துவோம். :) வாழ்க வளமுடன்...
https://www.facebook.com/photo.php?fbid=572549236125908&set=a.556040301110135.1073741825.100001125092690&type=1&theater

0 comments:
Post a Comment