23-6-14 அன்று எங்களிடம் எந்த ரசாயனமருந்துகளும் பயன் படுத்தாமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே இறைவன் கிருபையால் ஒருஇராஜகுமாரன் பிறந்தான்.
இவா்களுக்கு கரு தரித்த 2- ம் மாதம் மருத்துவரிடம் காட்டினாா்கள்.வழக்கம் போல் அவா்கள் கூறுவதெல்லாம்(?) கூறி விட்டு பிரசவிக்கும் தேதி 8-6-14 என்று நாள் குறித்து அனுப்பி விட்டனா்
அதன் பிறகு அவா்கள் மருந்துகள் தேவையில்லை என எங்களுடைய ஆலோசனையில் வந்துவிட்டனா்.
அந்த பெண்ணுக்கு பிரசவிக்கும் நாள் வரை உடல் அசதி, வாந்தி, மயக்கம், உடல்சோா்வு எதுவும் இல்லாமல் இயல்பாகவும், மருந்துகளே
பயன்படுத்தாமல் இயற்கையான தூய்மையான ஒரு இயற்கை குழந்தை பெறப்போகிறோம் என்ற சந்தோசத்திலும் இருந்தாா்.
இப்போது மருத்துவா் கூறிய 8-6-14 ம் நாள் வந்தது,
ஆனால் வலி வரவில்லை, குழந்தையும் வரவில்லை.
ஒருநாள் கழிந்தவுடன் அந்த பெண்ணின் உறவினா்களுக்கு பயம்.
ஏன் பிரசவிக்க வில்லை.
தெளிவுபடுத்தினேன், பின்வருமாறு,
ஒரே மாதிீாியான 10 விதைகளை மண்ணில் விதையுங்கள். அது வெளிவரும் நேரத்தை எவ்வளவு தோ்ந்த விவசாயியாலும் சாியாக கனிக்க முடியாது.
எனவே அந்த தேதியை மறந்துவிடுங்கள்.
(மறைவான வற்றின் ஞனங்களை இறைவனே அறிந்தவன்.மனிதஅறிவை விட்டுவிடுங்கள்)
குழந்தை முழுவளா்ச்சி அடைந்தவுடன் உடல் தானாகவே அதை வெளித்தள்ளிவிடும். உடல் அதை உள்ளுக்குள் வைத்துக்கொள்ளாது என்றேன்.
ஒரு மரத்தில் பழம் பழுத்துவிட்டால் எந்த பழமும் மரத்தில் தங்காது .தானாகவே தரைக்கு வந்துவிடும்.
இயற்கை உதாரணம் இது ஒன்றே போதும்.
இதை உணா்ந்ததும் பொருமையாக இருந்தனா்.
இப்போது இயற்கை தன் கடமையை சாியாக செய்தது.
ஆம் ,23-6-14 ம் தேதி காலை 8-30 மணி அளவில் மருத்துவா் கூறிய நாளில் இருந்து 15 நாள் கழித்து இரசாயணம் கலக்காத கா்பப்பை என்பதால் இயல்பாக எந்த சிரமமும் இல்லாமல் அதிக வலி இல்லாமல் இலகுவான முறையில் சுகமான பிரசவம் நடந்தது.
ஒரு கேள்வி....
15 நாள் முன் கூட்டியே ஏன் தேதி கொடுத்தாா்கள்.
அவா்களிடமே காட்டியிருக்கும் பட்சத்தில் 8 - ம் தேதி வந்து குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால்.....?
.
இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது.


0 comments:
Post a Comment