ஆக்சிடண்டும் அக்குபங்சரும் என் வாழ்வில்-3


விபத்து நடந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில் பயமுறுத்தல்களுக்கும், விவாதங்களுக்கும் இடையில், நிபந்தனை அடிப்படையில், நான்காம் நாள் வீட்டிற்க்கு அழைத்து சென்றனர் என்னை.
மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம்தான் என நம்பி [நம்ப வைத்து ஏமாற்றபட்டு] கொண்டிருக்கும் ஒரு சராசரியான குடும்பத்தில், விபத்து நடந்து எலும்பு உடைந்த நிலையில், நான் “படித்து உணர்ந்த” அக்குபங்சர் வாழ்க்கைமுறை அறிவியல்(acupunture life science) மருத்துவத்தை அவர்களுக்கு என்னால் முடிந்தவரை விளக்கினாலும் முழுதாய் ஏற்று கொள்ள முடியாமல், அரைகுறையாய் ஏற்றுகொண்டு நான் கேட்ட நான்கு நாள் அவகாசமும் கொடுத்தனர் என் வீட்டார். கொடுக்க காரணம்?
விபத்திற்கு ஆறுமாதங்களுக்கு முன் “கம்பம் அகாடெமி”யின் மாணவனானக நான் 2வது நாள் வகுப்பை முடித்து சர்க்கரைநோய் பற்றிய ஓரளவு புரிதலுடனும், மருந்து மாத்திரைகளினால் வரும் கேடுகளை பற்றிய தெளிவுடனும் வீட்டிற்க்கு வந்தேன். கிட்டத்தட்ட 13ஆண்டுகளாக சர்க்கரைநோய் என்று ஆங்கில மருத்துவத்தால் முத்திரை குத்தப்பட்டு அதற்கான மாத்திரைகளை உண்டு வந்த என் தந்தையை, உடனே சாப்பிடும் மாத்திரைகளை உறுதியாக நிறுத்த சொல்லிவிட்டு, எனது குரு “போஸ்” சாரிடம் சிகிட்சை எடுக்க சொன்னேன், சில மாதங்களுக்கு பிறகு அவருக்கு இருந்த தொந்தரவுகள் குணமடைந்தன, ஒருநாள் கூட தவறாமல் மாத்திரை போடாம இருக்க கூடாது என பயமுறுத்தபட்டிருந்தவர், அதில் இருந்து விடுதலை பெற்றதால் என்னுடைய நிபந்தனையை ஏற்றார்.
No automatic alt text available.
வியாழக்கிழமை வீட்டிற்க்கு அழைத்து வரப்பட்டேன், அடுத்த செவ்வாய்க்கிழமை காலை வரை எனக்கு கொடுக்கப்பட்ட அவகாசம், ஆங்கில மருத்துவத்தின் அறுவை சிகிச்சையில் இருந்து தப்ப வேண்டும், அக்குபங்சர் வாழ்க்கைமுறை மருத்துவம் நோய்களில் இருந்து மட்டும் அல்ல, எல்லா நிலையிலும் அது மனிதன் நலமுடன் வாழ்வதற்க்கான முழு வாழ்க்கை முறை என்பதை என் வீட்டாருக்கு உணர்த்த வேண்டும்.
எனக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பில் இருந்து நான் மீள்வதற்கான ரகசியம் எனக்கு ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது, அந்த எளிமையான ரகசியம் ஒவ்வொருவருக்கும் தனியானது, அது “ அவரவர் உடல் அறிவிப்பதை உணர்தல்” விபத்து ஏற்ப்பட்டு எனக்கு நினைவு திரும்பியது முதல் பசி என்ற உணர்வே ஏற்ப்படவில்லை, அதனால் எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை, வீட்டிற்க்கு வந்ததும் அடுத்த நான்கு நாட்கள் பழச்சாறுகளை மட்டும் எடுத்து கொண்டேன், மருத்துவமனையில் அவர்கள் கொடுத்த அணைத்து மருந்து, மாத்திரைகளையும் புறக்கணித்தேன், வீட்டில் இருந்த நான்கு நாட்களும் உறவினர்கள், நண்பர்களின் விவாத பொருளாகவும், அவர்களின் பரிதாபத்திற்கு உரியவனாகவும் ஆனேன்,
நான்கு நாட்களும் என்னை பார்க்க வரும் அனைவரின் அறிவுரையால் ஓடியது, வீட்டிற்க்கு வந்ததும் யாரிடமும் அவ்வளவாக பேசவில்லை, பேசினால் வாய் அசையும், வாய் அசைந்தால் அடிபட்ட எலும்பும் உடன் அசைய வேண்டும், எனவே முடிந்த வரை மவுனம் காத்தேன், “கை,கால் எலும்பு உடைந்துவிட்டால் நீ சொல்லுவது போல் நாட்டு வைத்தியத்தில் ஏதாவது கட்டுகிட்டு போட்டு அதை அசைக்காமல் வைத்திருந்து சரி செய்து விடலாம் உண்மைதான், ஆனால் உனக்கு முகத்தில் எலும்பு உடைந்துள்ளது அதை எப்படி உன்னால் அசைக்காமல் இருக்க முடியும்? பேசனும், தண்ணீராவது குடிக்க வாயை திறந்து தானே ஆக வேண்டும் அப்பொழுது எலும்பு அசையத்தானே வேண்டும், எப்படி எலும்பு கூடும்?”- என்றார் பார்க்க வந்த உறவினர், அவரது கேள்வியில் சிறிது தயங்கினாலும் நான் குணமடைவேன் என்று உறுதியாக சொன்னேன், வீட்டில் இருந்த நான்கு நாட்களில் முகத்தில் இருந்த வீக்கம் நன்றாக குறைந்திருந்தது, பேச்சும் முன்பு இருந்ததைவிட தேறிஇருந்தது,
பசி இல்லை அதனால் நான் சாப்பிடவும் இல்லை, நான் நன்றாக தேறிவருவதை என் வீட்டார் பார்த்து அறிந்திருந்தாலும், இருந்தாலும்.... என்று இழுத்தனர், அவர்கள் எனக்கு குடுத்த அவகாசம் முடிந்ததாகவும், இனி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்து எலும்பு எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது என்றும் சரியில்லை என்றால் அறுவை சிகிட்சைதான் என்ற முடிவுடன் செவ்வாய்க்கிழமை காலை KMC மருத்துவமனைக்கு என்னை அவருடைய பைக்கில் அழைத்து சென்றார் என் தந்தை, எனக்கு நான்கு நாட்கள் அவகாசம் அளித்திருந்த டாக்டரரை சந்திக்க பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் காத்திருந்தோம் நாங்கள், சிறிது நேரத்தில் வந்த அவர், என்னை பார்த்ததும், “ம்ம்.. அருண் குமார் தான நீங்க? இன்னைக்கு அட்மிட் ஆயிடுங்க, சின்ன சின்ன லேப் டெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு சர்ஜரி பண்ணிரலாம் என்றார்,
எலும்பு சேந்துருக்கா என்னான்னு ஸ்கேன் பண்ணி பாக்கலையா சார்? என்றேன் அப்பாவியாக நான்,
உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது(?) ஆப்ரேஷன் தான் பண்ணனும்,
ஆபரேஷன் பண்ணலேன என்னாகும்?
அவரிடம் ஏற்கனவே அறுவைசிகிட்சை செய்த பலரின் ஆப்ரேஷனுக்கு முன், பின் புகைப்படங்களை காட்டிவிட்டு, ஆப்ரேஷன் பண்ணலேனா உங்களது மூக்கு சப்பை ஆகிவிடும், உணவுகளை மெல்ல முடியாது,முக அமைப்பே மாறிவிடும் என்றார்,
சரி,சரி டெஸ்ட்லாம் எடுத்துட்டு அட்மிட் ஆயிடுங்க, எனக்கு அடுத்து ஒரு ஆப்ரேஷன் இருக்கு முடிச்சுட்டு வந்து பாக்குறேன் என்று கிளம்பிவிட்டார், சந்தோஷப்பட்டேன் நான்...
No automatic alt text available.
பின்ன சந்தோஷபடமா என்ன பண்றது? இத விட வேற என்ன வேணும்? ஆங்கில மருத்துவம் பொய்யின்னு எங்க வீட்ல சொல்ல, இந்த உரையாடலுக்கு பிறகு என்னிடமும், மருத்துவரிடமும் என்ன பேசுவது என தெரியாமல் குழம்பி கொண்டிருந்தார் என் தந்தை, அறுவைசிகிட்சை செய்ய மாட்டேன் என்றும், அது ஏமாற்று வேலை என்றும் தந்தையிடம் கூறி வீட்டிற்க்கு கிளம்பலாம் என்றேன் நான், இரு, இரு இன்னொருமுறை டாக்டர் வரவும் சொல்லிவிட்டு போகலாம் என்றார். நீங்கள் இருந்து சொல்லிட்டு வாங்க நான் போகிறேன் வீட்டிற்க்கு என்று நண்பருடன் கிளம்பிவிட்டேன். அடுத்த வாரம் வருவதாக சொல்லிவிட்டு வந்து இருக்கார் என் தந்தை, அதற்கு டாகடர் அனுப்பிய மெயில்தான் போன பதிவில் பார்த்தது, இதோடு எனக்கும் அலோபதிக்குமான தொடர்பு முடிவுக்கு வந்தது......
அதற்கடுத்த மறுநாள் நான் தற்பொழுது இருக்கும் ஊரான ஆண்டிபட்டிக்கு செல்ல என் தாய்,தந்தையுடன் அரசு பேருந்தில் மதுரைக்கு பயணமானேன்.......
(நண்பர்கள் மன்னிக்கவும், எனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை முழுவதும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவு அடுத்தும் தொடர்கிறது...)
எப்படி இருபது நாட்களில் உணவுகளை மென்று முழுங்க ஆரம்பித்தேன், முப்பது நாட்களில் என்னுடைய வழக்கமான பணிகளுக்கு திரும்பினேன், அறுபது நாட்களில் அசைவ உணவு உண்ண முடிந்தது? இன்னும் பல என் உடல் எனக்கு அறிவித்த ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.. நீங்கள்?

0 comments:

Post a Comment