ஆக்சிடண்டும் அக்குபங்சரும் என் வாழ்வில்-நிறைவு பகுதி


விபத்து நடந்து 10 நாட்கள் முடிந்திருந்தது, முகத்தில் இருந்த வீக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டது, எனக்கு நினைவு திரும்பியது முதலே வலி என்பது அவ்வளவாக இல்லை சிறய அளவிலே வலி இருந்து கொண்டிருந்தது, தொடர்ந்து பேசினால் மட்டும் வலி கூடுதலாக இருந்தது. திருச்சியில் எனக்கும், என் தந்தைக்கும் நட்பு வட்டம் அதிகம் என்பதால் என்னை பார்பதற்காக தினமும் ஆட்கள் வந்துகொண்டேயிருந்தனர்.பார்த்து விட்டு மட்டும் போனால் பரவாயில்லை,அவர்களின் அலோபதி மருத்துவ பயமுறுத்தலை வீட்டாரிடம் வெளிபடுத்தினர். அதில் இருந்து தப்பிப்பதற்காக ஆண்டிபட்டி சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று என் வீட்டாரிடம் கூறினேன், சம்மதித்த அவர்கள் ஆண்டிபட்டி செல்ல வாடகை கார் எற்பாடு செய்வதாய் சொன்னதை தவிர்த்து விட்டு அரசு பேருந்தில் பயணமானோம் மதுரைக்கு,
உடலின் இயக்கம் பற்றிய முழுமையான புரிதலுடன் ஏழுமாதங்களை கடந்துவிட்டிருந்தேன் அக்குபங்ச்சர் எனும் தொடு சிகிச்சை வகுப்பில், அதாவது இந்த மனித உடலானது யாரோ ஒருவரால் இயந்திரத்தை போல பல்வேறு உதிரிபாகங்களாக தயாரித்து இணைக்கபடவில்லை, ஒரு செல்லில் இருந்து இந்த உடலின் பயணம் துவங்கியது. அந்த ஒரு செல்லில் இருந்துதான் பல செல்களாக பிரிந்து கூட்டாக இணைந்து தசைக்கட்டியானது, அதிலிருந்தே உடல் உறுப்புகளுக்கான திசுக்கள் உருவானது,அவைகள் இணைந்து உறுப்புகள் உருவானது,
இவ்வாறே உடலின் முக்கிய ராஜ உறுப்புகளான இருதயம்,மண்ணீரல்,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற அனைத்தும் உருவானது, இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான வளர்ச்சி எப்பொழுது முடிவடைகிறதோ அப்பொழுது அந்த உடல் தானே வெளிவருகிறது, ஒரு செல்லில் இருந்து தன்னை தானே உருவாக்கி கொண்ட இந்த முழு உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆன பிறகு தனக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தானே சரிசெய்து கொள்ளும். அதற்கு நாம் செய்ய வேண்டியது உடல் உணர்த்துவதை,கேட்பதை மட்டும் செய்தால் போதும் எந்த மருத்துவமும்(அக்கு பங்ச்சர் உட்பட) தேவையில்லை என்ற உடலின் இயக்கத்தை உணர்ந்து இருந்தேன்.

Image may contain: 1 person, text
மதுரைக்கு சென்றதும் எனது குரு அக்குஹீலர் போஸ்சாரை சந்தித்து அவரிடம் ஆலோசனையும், சந்தேகங்களையும் கேட்டுவிட்டு ஆண்டிபட்டி செல்வதாய் முடிவு செய்திருந்தனர் என் வீட்டார், அவர்களின் எண்ணப்படி சாரை சந்திக்க மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது “அக்குபங்சர் இல்ல”த்திற்கு சென்றோம். என்ன அருண் எப்படியிருங்கீங்க? என்று புன்சிரிப்புடன் வரவேற்றார், நலமாயிருகிறேன் சார், என்றபடி கடந்த பத்து நாட்களாக நடந்த நிகழ்வுகளை சொல்லிவிட்டு, அப்பா,அம்மா தான் ரெம்ப பயபடுறாங்க சார், அவுங்களுக்காகதன் நீங்க ஆலோசனை சொல்லணும் என்றேன், சிரித்தபடி என் பெற்றோரை பார்த்த அவரிடம் சார் நாங்க என்ன சொன்னாலும் ஆப்ரேஷேன் வேண்டாம்னு சொல்றான், எலும்பு எப்படி சார் அதுவா சேரும் என்று என் பெற்றோர் கேட்கவும், நிச்சயமாக சேரும், 2 வருடங்களுக்கு முன் கம்பம் அகாடமியின் முதல்வர் உமர் பாரூக் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் மார்பு பகுதியில் எலும்பில் அடிபட்டு வலி இருந்தது, எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார், சில நாட்களில் குணமடைந்தார், அருண் சொல்வதை கேளுங்கள், அவர் கேட்பதை மட்டும் குடுங்கள் என்று சொல்லி விட்டு எழுந்து என்னருகில் வந்தார்,
எனது கையை பிடித்து நாடி பார்த்தார். [இந்திய மரபு வழி அக்கு பங்சர் மருத்துவத்தில் நாடி பார்த்தல் என்பது நோயறிதல்(dignosis) முறையாகும், “அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம்”-திருமூலர். எவ்வாறு இந்த உலகம் பஞ்ச பூதங்களால்(நெருப்பு,நிலம்,காற்று,நீர்,ஆகாயம்) படைக்கப்பட்டள்ளதோ அதே போலதான் இந்த உடலும் பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்டுள்ளது என்று பாரம்பரியம் மிக்க தமிழ் மரபில் கூறப்பட்டுள்ளது. மனித உடலில் ரத்ததை உடலின் பாகம் எங்கும் பரவ செய்யும் இருதயம் நெருப்பு ஆகவும், எதை நிலத்தில் போட்டாலும் அதில் உள்ள சக்தியை பிரித்தெடுக்கும் நிலமாக மண்ணீரலும்,காற்று ஆக நுரையீரலும், நீர் ஆக சிறுநீரகமும், ஆகாயம் என்னும் மரம் ஆக கல்லீரலும் உள்ளது. இந்த பஞ்சபூத மூலகங்களுக்கு கிடைக்கும் சக்தி ஓட்டபாதையில் ஏற்படும் குறைபாட்டை கண்டறிவதே நாடி பரிசோதனை ஆகும்.]
அதன் பின் என் உடலில் ஒரு இடத்தில் சில நொடிகள் தொட்டு சிகிச்சை அளித்தார்.[[ நாடி பரிசோதனையின் மூலம் எந்த மூலகத்திற்க்கான சக்தி ஓட்டபாதையில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பின் அதை சீர் செய்வதற்க்கான அக்குபங்சர் புள்ளிகள் தோலின்மேல் அமைந்துள்ளன, அந்த புள்ளிகளை விரலலோ, ஊசியாலோ தொட்டு தூண்டுவதே சிகிச்சை முறையாகும்]]. சிகிச்சை அளித்திருக்கிறேன், ஓரிரு வாரங்களில் அருண் முழுவதும் குணமடைவார் என்றார் போஸ் சார். எலும்பு இணைந்து விட்டது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? 1மாதம் கழித்து ஸ்கேன் பண்ணி பாக்கலாம சார்,என்றனர் என் வீட்டார், தேவையில்லை, அருணுக்கு இப்பொழுது அடிபட்ட இடத்தில வலி உள்ளது, எலும்பு இணைந்ததும் வலி நின்று விடும், நன்றாக மென்று சாப்பிட முடியும், இவைதான் சரிஆகி விட்டதற்க்கான நிரூபணம், இதைவிட இயந்திரத்தின் ஸ்கேன் முடிவு நிரூபித்து விட முடியுமா? என்றார், சரி அருண் முழு ஓய்வில் இருங்கள், எந்த வேலையும் செய்ய வேண்டாம் வீட்டிலேயே இருங்கள் என்றார், நாளை மறுநாள் இந்த மாத தொடுசிகிட்சைவகுப்பில் கலந்துகொள்ள கம்பம் வரவேண்டும் என்றேன், தேவையில்லை அருண் நீங்கள் ஓய்வெடுங்கள் அடுத்த மாத வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றார், என்னால் வரஇயலும் சார் வருகிறேன் என்றேன், சரி உங்கள் விருப்பம் என்றார் சிரித்தபடி, அதோடு அவரிடம் விடைபெற்று ஆண்டிபட்டி கிளம்பினோம்.
09.01.2014--ஆண்டிபட்டி வரும் வழியில் எனக்கு விபத்து ஏற்ப்பட்ட ஊரான பூச்சிபட்டியை பார்த்தேன். மனம் மகிழ்ந்து நினைவுகள் பின்னோக்கின.....
இரண்டு மாதங்களுக்கு முன் face bookல் ஒரு விவாதம் ரத்தகாயங்கள், விபத்து, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலைகளில் அக்குபங்சர் பலனளிக்காது என ஒருவர் பதிவிட அதற்க்கு மறுப்பு தெரிவித்து நான் அக்குபங்சர் மருத்துவமுறை மட்டும் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை மேலும் விபத்து ஏற்பட்டு ரத்தகாயம், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லாமலே வீட்டிலேயே ஓய்வு எடுத்து குணமடைந்தோர் கம்பம் அகாடமியில் உண்டு என்று பதிவிட விவாதம் நீண்டு கொண்டே போனது, இறுதியில் அவர் அக்குபங்சர் அணைத்து நிலைகளிலும் பலனளிக்கும் என ஒப்பு கொண்டார், இந்த விவாதம் முடிந்து 1மாதத்திற்கு பின்தான், என்னுடைய சொல்லும் செயலும் ஒன்றா என்று இயற்கையின் பேராற்றல் என்னை பூச்சிபட்டி விபத்தின் மூலம் சோதித்துள்ளதாக எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தேன்,
நவீன அறிவியலின் அணைத்து பயமுறுத்தல்களையும் புறம்தள்ளிவிட்டு இயற்கையின் பேராற்றலின் ஒரு அங்கமாம் என் உடலின் உணர்வு சொல்வதை முழுவதுமாய் கடைபிடிக்க ஆரம்பித்தேன், 10நாட்கள் வரை பசியில்லாததால் சாப்பிடாமல், பழச்சாறு மட்டும் எடுத்து கொண்டிருந்தேன், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்கான ஆற்றலை பெறுவதற்காக இதுவரை இயல்பாக பழச்சாறுகளை விரும்பாத என்னுடல் அந்த நாட்களில் மிகுந்த விருப்பமுடன் அவற்றை கேட்டது, பகலில் தூங்கும் பழக்கம் இல்லாத எனக்கு ஒரு நாளின் பெரும்பகுதி தூக்கத்திலேயே கழிந்தது,
11வது நாள் மெதுவான பசி உணர்வு ஏற்பட்டது, பழங்களை கடித்து பார்த்தேன் கடிக்க முடிந்தது ஆனால், பல் வலி இருந்தது, சரி எலும்பு இன்னும் இணையவில்லை, மெல்லும்படியான உணவுகளை தவிர்த்து, கஞ்சி,சூப்,கூழ் போன்ற சமைத்த திரவ உணவுகளை எடுத்துகொள்ளவது என முடிவு செய்தேன்,
விபத்து நடந்து 12வது நாள் 11.01.2014 அன்று சக மாணவர்களின் துணையோடு கம்பம் வகுப்பிற்கு செல்வதாக வீட்டில் பொய்சொல்லிவிட்டு(சக மாணவர்களுக்கு எனக்கு நடந்த விபத்து தெரியாது) பேருந்தில் கம்பம் சென்றேன் சுதந்திரமாக, வழக்கம்போல் அன்றைய வகுப்பும் அக்குஹீலர்கள் போஸ் சார் மற்றும் உமர் சார்ரால் சிறப்பாக நடந்தது, அன்றைய பகல் பொழுதில் தூங்காமல் கவனம் முழுவதும் வகுப்பில் இருந்ததால், மாலை வகுப்பு முடிந்ததும் உடல் சோர்வாக இருந்தததை உணர்ந்தேன்,பசியும் அதிகமாக இருந்தது. காலையில் பருகிய சூப்பும், மதியம் அருந்திய மாதுளம் பழச்சாறும் உடல் இயக்கத்திற்கும், பராமரிப்புக்கும் போதவில்லை போலும், சக மாணவர்கள் தேனிவரை உடன் வந்து ஆண்டிபட்டி பேருந்தில் அனுப்பி வைத்தனர்,
உடல் பராமரிக்கும் பணியில் இருக்கும்போது, நானாக குறுக்கிட்டு உடலின் இயக்க சக்தியை பயன்படுத்தியதால் மிகுந்த களைப்படைந்திருந்தேன், மறுநாள் வகுப்பிற்கு செல்லவில்லை ஓய்வை தொடர்ந்தேன்,
ஓய்வு வேளையில் நான் படித்தறிந்த இந்திய மரபுவழி அக்குபங்சர் கூறும் ஒருங்கிணைந்த உடல் அறிவியலோடு என் உடலில் நடைபெறும் மாற்றத்தோடு ஒப்பிட்டு உணர்ந்து கொண்டிருந்தேன், சில நாட்களுக்கு முன் எழுத நினைத்திருந்த என் சிறுவயது மருத்துவ அனுபவத்தை “அன்பில்லாத டாக்டர் அவர்களுக்கு” எனும் கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன், இப்படியாக எங்கும் வெளியே செல்லாமல் 3நாட்களாக வீட்டிலேயே இருந்தேன்,
17வது நாள் விபத்தில் சிக்கிய பைக்கின் நிலையறிய டூ-வீலர் வொர்க் ஷாப்பிற்கு தம்பி ஒருவனுடன் பைக்கில் சென்றேன், எனது பைக்கின் முன் பகுதி முற்றிலும் சேதமாகியிருந்தது, சாக்கப்சர்,டயர்,வீல் என அனைத்தும் மாற்ற வேண்டும் 15,000ரூபாய்க்கும் மேல்செலவாகும் என்றார் மெக்கானிக். செலவில்லாமல் சரியாக அது என்ன இயற்கை பேராற்றலின் படைப்பா என்ன? மனித அறிவின் படைப்புதானே என்று மனதிற்குள் சிரித்துகொண்டு வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
20வது நாள் அதிகம் பேசினாலும் வலி இல்லை, மேல் கடவாய் பற்களையும் கீழ் கடவாய் பற்களையும் கடித்து பார்த்தேன்,இடது புறம் இணைந்தது, வலது புறம் இணையவில்லை, உணவு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது, பருப்பு சாதம் சாப்பிடேன், மெல்ல முடிந்தது, வலி அவ்வளவாக இல்லை, இவ்வாறாக உடல் உணர்த்துவதையும்,கேட்பதையும் மட்டும் கவனித்தேன்,
பிப்ரவரி 1 விபத்து நடந்து சரியாக 33வது நாள் என்னுடைய தினசரி பணிகளுக்கு வழக்கம்போல திரும்பினேன், அந்த மாத இறுதியிலே அசைவ உணவுகள் உண்ணம் அளவிற்கு பற்கள் வலு பெற்றது, உடைந்த என் எலும்புகள் எந்த அறுவைசிகிச்சையும் இன்றி தானாக இணைந்தது இதன் மூலம் எனக்கு நிரூபணம் ஆனது, அதற்க்கு முன்புவரை ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறி கொண்டிருந்த என் பெற்றோர் கூறுவதை நிறுத்தி விட்டனர்,
நான் குணமடைந்த அக்குபங்சர் வாழ்க்கை அறிவியலை அனைவரும் அறிந்து பயன்பெற என் வாழ்நாளை செலவிடுவது என தீர்மானித்திருந்தேன். தொடுசிகிட்சை வகுப்பிலும் நோயாளிகளுக்கு சிகிட்சை அளிப்பத்ற்க்கான வகுப்பு முடிவுற்று பயிற்சியில் ஈடுபட ஆயுத்தமானேன்.
என் உடல் சரியானதை உடன் இருந்து பார்த்த நண்பர் ஒருவர் அவரின் தாய்க்கு கர்ப்பபை புற்றுநோய் இருப்பதாகவும், அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும் தேவைபட்டால் கர்பப்பையையே அகற்ற வேண்டி வரும் என ஆங்கில மருத்துவர் கூறி விட்டார், அம்மாவிற்கு அதில் உடன்பாடில்லை உங்கள் மருத்துவத்தில் இதற்க்கு தீர்வு உண்டா என்றார், நிச்சயமாக உண்டு, பாதிப்படைந்த உறுப்பை நீக்குவது அல்ல மருத்துவம், அதை பலபடுத்தி அதனை செயல்பட வைப்பதே உண்மையான மருத்துவம். அதற்கு தொடுசிகிச்சை சிறந்த தீர்வளிக்கும், மருந்து, மாத்திரைகளை நிறுத்துங்கள் சிகிட்சையை ஆரம்பிக்கலாம் என்றேன். உடனே மாத்திரைகள் உண்பதை நிறுத்தினார். என் முதல் சிகிட்சை அவரிடம் இருந்து துவங்கினேன், இயற்கையின் பேராற்றல் உதவியால் என்னை சுற்றி உள்ள சமூகத்தை நோய்களிலிருந்து விடுவித்து, ஆரோக்கியத்திற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்,
எனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு MEDICAL MIRACLE(மருத்துவ அதிசயம்) என்று நவீன மருத்துவதால் முத்திரை குத்தப்படும், நிச்சயமாக அது உண்மையல்ல, உடலின் இயக்கம் பற்றி புரிந்த அனைவருக்கும் இது சாத்தியமே. சத்தியமே. இதைஉணர்ந்தவர்கள் MEDICAL MIRACLE என்பது நவீன மருத்துவத்தின் கையாலாகாதனம் என்று நன்கறிவர். இதை படிக்கும் நீங்களும் உங்கள் உடலை உணர இயற்கையின் பேராற்றல் உங்களுக்கு துணைபுரியும், அதற்கு அடிப்படை பசியை உணர்தல்,
மருந்துதென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.-திருக்குறள் 942 மருந்து என்பது உடலுக்கு தேவையில்லை பசியை உணர்ந்து உண்போருக்கு,
இந்த எனது அனுபவ கட்டுரை சம்பந்தமான உங்களது அணைத்து சந்தேகங்களுக்கு பதிலளிக்க காத்திருகிறேன். முடிந்தவரை COMMENTல் கேளுங்கள், https://www.facebook.com/photo.php?fbid=712886402097785&set=a.200061373380293.58022.100001292960287&type=3&theater

 தனியாக பேச விரும்புவர்கள் என் தொலைப்பேசியில் அழைக்கலாம்- 9965849032
நன்றிகள்: கம்பம் அகாடமி ஆப் அக்குபங்ச்சர், கம்பம்,
சிற்பி வாழ்வியல் மையம், சிவகாசி, செம்மை வனம்,ஆச்சாம்பட்டி மற்றும் நண்பர்கள் Siva

0 comments:

Post a Comment