போலியோ சொட்டு மருந்துமுகாம் 7 குழந்தைகள் பலி


சென்னை:"பணம் பண்ணுவதில் தான் தி.மு.க., அரசு கவனம் செலுத்துகிறதே தவிர நிர் வாகத்தில் கவனம்செலுத்து வதாகத்தெரியவில்லை'  என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:நோயை ஒழிக்கிறேன் என்று சொல்லி இளம் உயிர்களை அழிக்கும் வேலையில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது. 

 Latest indian and world political news information

இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிப் பதற் கான முதல் முகாம், கடந்த 21ம் தேதி நடந்தது.இந்த முகாமின் போது, ஈரோடு, சத்திய மங்கலம் அருகே உள்ள கொடிவேமேட்டில் சங்கர் என்ற குழந்தையும், கும்பகோணம் அருகே ஏழுமான் திடலில் ஒன்பது நாள் பெண் குழந்தையும், பெரம்பலூர் ஏசனையில் ஐந்து மாத ஆண் குழந்தையும், ராமநாதபுரத்தில் ஐந்து மாத குழந்தையும், அரவக்குறிச்சி அருகே சின்னகவுண்டன் புதூரில் ஆறு மாத குழந்தையும், தர்மபுரி, கடகத்தூர் பகுதியில் ஐந்து நாள் பெண் குழந்தையும் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


0 comments:

Post a Comment