காய்ச்சல் விரைவாக குணமாவதற்காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க
விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின்
ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என
சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்..!
தமிழகத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆனால் சில டாக்டர்கள் தேவையில்லாத ஊசிகளை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள், பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை (டிபிஎச்) இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:
காய்ச்சல் சீக்கிரமாக குணமாக சில டாக்டர்கள் மற்றும் பெரும்பாலான போலி டாக்டர்கள் ஸ்டீராய்டு, டைக்லோபினாக் மற்றும் பாராசிட்டமால் ஊசிகளை போடுகின்றனர். (தெரிந்து கொள்ளுங்கள், காய்ச்சலுக்கு ஊசி போடுபவர்கள் போலி டாக்டர்கள்..!) ஸ்டீராய்டு ஊசி தற்காலிகமாக காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலுக்கான காரணத்தை சரி செய்யாது. அதே நேரத்தில், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
டைக்லோபினாக், காய்ச்சலுக்கான மருந்தே இல்லை. இது ஒரு வலி நிவாரணியாகும். இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போடுவதால், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு, டைக்லோபினாக்கை ஊசி மூலம் போட்டுக் கொள்ளவோ, மாத்திரை, மருந்தாக உட்கொள்ளவோ வேண்டாம். பாராசிட்டமால் காய்ச்சலுக்கானதுதான். அதை மாத்திரை அல்லது மருந்துகளாக உட்கொள்ளலாம். மாறாக ஊசி மூலமாக செலுத்தினால் வலி அதிகமாக இருக்கும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் (..?!) உடலில் ஏற்படும்.
மாத்திரை, மருந்து;
எனவே காய்ச்சலுக்கு டாக்டர்களிடம் செல்பவர்கள் அவரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும். அப்படியும் காய்ச்சல் குறையவில்லை என்றால், வீட்டிலேயே மிதமான சூடு உள்ள தண்ணீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், அக்குள், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவாக காய்ச்சல் குறையும்.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களும் தங்களுடைய சமூக பொறுப்பை உணர்ந்து, காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடுவதை தவிர்க்க வேண்டும். (அதாவது, காய்ச்சல் ஒரு நோய் அல்ல, அது வெறும் அறிகுறி மட்டுமே என்ற உண்மையை இனியாவது மக்களுக்கு சொல்லுங்கள்..!)
இவ்வாறு அவர் தெரிவித்தார்....
ஆகமொத்தம் நீங்க சொல்லவர்றது என்ன..? காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல அதனை மருந்தை போட்டு அடக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி அழிக்கப்படும், மருந்துகளின் விஷங்கள் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளை மிக மோசமாக பாதிக்கும் என்று தானே...!
காய்ச்சல் குறையவில்லை என்றால், வீட்டிலேயே மிதமான சூடு உள்ள தண்ணீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், அக்குள், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவாக காய்ச்சல் குறையும் தானே. பின்பு எதற்கு மருந்துகள் மற்றும் மாத்திரைகள்...?
பக்கவிளைவுகள் என்பவை அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஏற்படுவதுதானே என்று லேசாக நினைத்துவிட வேண்டாம். அமெரிக்காவில் 2003 டிசம்பரில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை ஆங்கில மருத்துவத்தின் இறப்புக்கள் குறித்து விரிவான பட்டியலை சமர்ப்பித்திருக்கிறது. அதுவும் யாரோ சிலர் நடத்திய சாதாரண ஆய்வுகள் அல்ல: நீண்டகால ஆங்கில மருத்துவ அனுபவமுள்ள ஐந்து ஆய்வு மருத்துவர்கள் குழுவினரின் பத்தாண்டு காலத்திற்கான அறிக்கை.
டாக்டர்.கேரி நல், டாக்டர். கரோலின் டீன், டாக்டர்.மார்டின் பெல்ட்மென், டாக்டர். டெபோரா ரசியோ, டாக்டர். டோரொதி ஸ்மித் ஆகியோரைக் கொண்ட அக்குழு பத்தாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட இறப்புகளைப் பட்டியலிடுகிறது.
மருந்துகளின் பக்கவிளைவுகளால் ஏற்பட்ட மரணங்கள்: 10,06,000 பேர்
மருத்துவத்தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள்: 9,98,000 பேர்
மருத்துவமனை படுக்கையில் ஏற்பட்ட புண்களால் மரணம்: 10,15,000 பேர்
மருத்துவமனையில் இருந்த நிலையில் ஒவ்வாமையால் மரணம்: 8,80,000 பேர்
தவறான சிகிச்சையால் மரணம்: 3,71,360 பேர்
தவறான அறுவை சிகிச்சையால் மரணம்: 3,20,000 பேர்
தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால் மரணம்: 10,09,000 பேர்
வெளிநோயாளிகளில் பக்கவிளைவு களால் மரணம் : 10,99,000 பேர்
ஆக மொத்தம் 67 லட்சத்து 6 ஆயிரத்து 360 பேர் என்பது மருத்துவத்தில் நாம் எளிமையாகச் சொல்லும் பக்கவிளைவுகளால் கடந்த பத்தாண்டுகளில் மரண மடைந்தவர்களின் எண்ணிக்கை. மருத்துவத்தால் மரணம் என்ற அந்த அறிக்கை தன் இறுதிப்பகுதியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டிருக்கிறது.
“ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.”
YOU NEED TO UNDERSTAND THAT "THEY" WANT YOU SICK AND DYING EXPENSIVELY.
நன்றி : http://www.deathbymodernmedicine.com/
“உண்மை ஓரளவுதான் மக்களை எட்டுகிறது. பொய்மையும் மூடத்தனமும் பெரும்பான்மையோரை வென்றுவிடுகிறது” - அரிஸ்டாடில்.
உண்மையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, முன்னேறிய 14 பணக்கார நாடுகளில் அமெரிக்காவில் தான் நோய்களும், மரணமும் அதிகம் என்று தெளிவாகக் காட்டுகிறது. மருத்துவ நல வரிசையில் அமெரிக்கா 13 வது இடத்தையே பிடித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் சிறப்பு டாக்டர்களும், உயர்நுட்ப மருத்துவமனைகளும் உள்ள நாட்டில் மருத்துவத் தரமும், நோய்களும் குறைவான சிறப்பு டாக்டர்களும், உயர்நுட்ப மருத்துவமனைகளும் கொண்ட நாட்டை விடச் சிறப்பானதாக இல்லை. ஜப்பான் சிறப்பான மருத்துவ நிலை பெற்றுள்ள நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இஸ்ரேலில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்தில் அங்கு மரணம், உறுப்பிழப்பு, செலவு எல்லாம் குறைந்தது என்றும் டாக்டர்கள் தமது வேலை நிறுத்தத்தைக் கைவிட்டபின், பழைய படி கூடிவிட்டது என்றும் வருந்தத்தக்க விபரம் வெளியானது.
- “மருத்துவ மனையில், நோயுடன் வருபவர்களைக் காசு காய்க்கும் மரமாக உலுக்காதே” என்று எச்சரிக்கிறார் மருத்துவத்தின் தந்தை ஹிபாகிரேடஸ்...!

0 comments:
Post a Comment