மாமல்லபுரத்தில் மயக்கம்: திருப்போரூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்,
மாமல்லபுரம் அடுத்த புதுஎடையூர் மீனவர் குப்பத்தில், நேற்று காலை போலியோ
சொட்டு மருந்து முகாம் நடந்தது. காலை 11 மணிக்கு ஏராளமான குழந்தைகளுக்கு
சொட்டு மருந்து போடப்பட்டது. ஒரு குழந்தைக்கு வாந்தி வந்தது. இதையறிந்த
மற்ற பெற்றோர் சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளை தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.குழந்தைகளைப் பரிசோதித்த டாக்டர்கள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எட்டு ஆண்
குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெங்கடேசன் மகள் சுபர்ணா(2),
மயில்சாமி மகன் கிஷார்(2) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.



0 comments:
Post a Comment